ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் 144 தடை உத்தரவு உட்பட புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்தி ஒன்று வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வாட்ஸ்அப் செய்தி ஒன்று வைரலாகிறது.

வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய நடைமுறைகள் வெளியாகவிருப்பதாக பரவும் செய்தியறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து அறிய அரசு சார்ந்த முக்கிய சமூக வலைத்தள அதிகாரப்பூர்வ பக்கங்களை ஆராய்ந்தோம்.
அத்தேடலின் முடிவில், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட இந்த வைரல் செய்தி குறித்த மறுப்பு வெளியிடப்பட்டிருந்தது.
Archived Link: https://archive.ph/1fWv2
அதில், “கோவிட்-19க்கான லாக்டவுன் குறித்த போலிச்செய்திகளை நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த செய்தியறிக்கை போலி என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய நடைமுறைகள் அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகப் பரவும் செய்தியறிக்கை போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்
Result: Fabricated
Our Sources:
Greater Chennai corporation: https://twitter.com/chennaicorp/status/1379423646238666752?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)