Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் வெடி வைத்து தாக்கினர்.
இத்தகவல் தவறானதாகும். ஏமன் ஹவுத்தி ராணுவ படையினர் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக நடத்திய தாக்குதலே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“காலைலயே கண்ணிவெடி வச்சு, பாக் இராணுவ வீரர்கள மொத்தமா தூக்கிருக்கானுங்க பலூச் ஆர்மி. பலூச் எல்லைக்குள்ள வந்தாலே அடிப்போம்னு எச்சரிக்கை வேற கொடுத்திருந்தானுங்க பலூச் ஆர்மி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் வெடி வைத்து தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, இன்விட் (InVID) உதவியுடன் அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் @mog_china எனும் பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் மார்ச் 17, 2024 அன்று வைரலாகும் இவ்வீடியோ முழுமையாக பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஏமன் நாட்டிற்குள் அமெரிக்க – இங்கிலாந்து படையினர் ஊடுருவ முற்படும்போது தாக்கப்பட்டதாக கூறி இவ்வீடியோ பகிரப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஹிஸ்பன் டிவி எனும் ஸ்பானிஷ் ஊடகமும் இதே தகவலுடன் இதே வீடியோவை மார்ச் 18, 2024 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவில் ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுத்தி ராணுவ படையின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை ஆதாரமாக வைத்து அடுத்ததாக ஹவுத்தி ராணுவ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை ஆராய்ந்தோம்.
அத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றில் வைரலாகும் வீடியோவின் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. மொத்தம் 42 நிமிடம் 42 வினாடி நேர நீளமுள்ள அவ்வீடியோவில் 32 ஆவது நிமிடம் 7 ஆவது வினாடியில் அக்காட்சி இடம்பெற்றிருந்தது. இஸ்ரேலிய படைக்கு எதிராக இத்தாக்குதல் நடைபெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
Also Read: முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்று பேசினாரா சீமான்?
பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் வெடி வைத்து தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். ஏமன் ஹவுத்தி ராணுவ படையினர் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக நடத்திய தாக்குதலே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from @mog_china, dated May 17, 2024
X post from Hispan TV, dated May 18, 2024
Yemeni Houthi Militant Website
Vijayalakshmi Balasubramaniyan
May 20, 2025
Kushel Madhusoodan
May 15, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 13, 2025