Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர்.நிர்மல்குமார் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் திமுக அலுவலகங்களாக மாற்றப்பட்ட டாஸ்மாக் அரசு அலுவலகங்கள் என்பதாகப் புகைப்படத்தகவல் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
“டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக எப்போது மாற்றப்பட்டது?” என்கிற கேள்வியுடன் திமுக அலுவலகம் என்று குறிப்பிடப்பட்டிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக மாறியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட இணையதளப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
Tamilnadu state marketing corporation Ltd என்கிற டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் ஆங்கிலத்திலேயே இருக்கும் நிலையில் அதில் மாவட்ட மேலாளர்கள் அலுவலக முகவரிகளும் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றிருந்தன. மேலும், DM office என்கிற வரிசையே சிடிஆர்.நிர்மல் குமார் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் திமுக அலுவலகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நாம் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் மூலமாக குறிப்பிட்ட இணையப்பக்கத்தை மொழிபெயர்த்தபோது அது DM office என்பதை திமுக அலுவலகம் என்று மொழிபெயர்க்கிறது என்பது நமக்குத் தெரிய வந்தது.
Google Translate பக்கத்தில் நேரடியாக சென்று நாம் தேடினாலுமே DM office என்பதை அது திமுக அலுவலகம் என்றே மொழிபெயர்க்கிறது என்பதை நாம் அறிய முடிந்தது.
மேலும், டாஸ்மாக் இணையதளத்தில் உள்ள மாவட்ட அலுவலகங்களில் சிலவற்றிடம் தொடர்பு கொண்டு அவை அரசு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களே என்பதையும் உறுதி செய்து கொண்டோம்.
Also Read: ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக மாறியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட இணையதளப்புகைப்படம் கூகுள் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
TASMAC Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 12, 2024
Vijayalakshmi Balasubramaniyan
July 30, 2024
Vijayalakshmi Balasubramaniyan
May 13, 2024