ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ.

Fact: வைரலாகும் வீடியோ அண்மை வீடியோ அல்ல. 2019 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியிலேயே அருந்தியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. வீடியோவில் உள்ள அந்த மாணவிகள் மீதும், அம்மாணவிகள் பயிலும் பள்ளியின் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இவ்வீடியோவானது பரப்பப்பட்டு வருகின்றது.

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ.

X Link | Archive Link

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ.

Archive Link

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியில் இருந்து விலகுவதாகப் பரவும் 2018ஆம் ஆண்டு செய்தி!

Fact Check/Verification

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் தமிழன் மீடியா எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ ஏப்ரல் 03, 2019 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதாவது ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுக ஆட்சி காலத்தில் இவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ.

இவ்வீடியோவில் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் இச்சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் 2019 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் பலர் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் இச்சம்பவம் நடந்ததாக கூறி வைரலாகும் வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து இச்சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று தேடுகையில் இதுக்குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. வருங்காலத்தில் கிடைக்கும்பட்சத்தில் அத்தகவல்கள் இக்கட்டுரையில் இணைக்கப்படும்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் தற்போது நடந்ததல்ல எனவும் இச்சம்பவத்திற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் தொடர்பில்லை என்பதும் உறுதியாகின்றது.

 Also Read: சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் வீடியோ தற்போதைய வீடியோ அல்ல. அது 2019 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube post from Thamizhan Media, Dated April 03, 2019
Social media posts from 2019, (1), (2), and (3)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular