ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கடலூர்-புதுச்சேரி புதிய நெடுஞ்சாலை என்பதாக புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot From Twitter @jenniifer_off

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?

Fact Check/Verification

கடலூர்-புதுச்சேரி புதிய நெடுஞ்சாலை என்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, குறிப்பிட்ட வைரல் புகைப்படங்களில் ‘Droneman’ என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருந்ததை நம்மால் காணமுடிந்தது. எனவே, அப்பெயரில் உள்ள சமூக வலைத்தளப்பக்கத்தை தேடினோம்.

முடிவில், @yt_droneman என்கிறவரின் பக்கத்தில் இப்புகைப்படங்கள் ”Delhi Mumbai Expressway Godhra Section Progress” என்கிற தலைப்பில் வைரலாகும் அதே புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், இந்த புகைப்படங்களுடன் தொடர்புடைய வீடியோவையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனவே, ‘கடலூர்-புதுச்சேரி சாலை’ என்று வைரலாகும் புகைப்படங்கள் தமிழகத்துடன் தொடர்புடையது அல்ல என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையான டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் முதல் பகுதியை இந்தியப் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

Conclusion

கடலூர்-புதுச்சேரி புதிய நெடுஞ்சாலை என்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே கோத்ரா பகுதி கட்டுமானத்தின் புகைப்படங்கள் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Twitter Post From, Droneman, Dated February 11, 2023

YouTube Video From, Droneman
Twitter Post From, Minister Nitin Gadkari, Dated February 12, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular