ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதுருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்

“துருக்கி காரில் உள்ள கேமராவில் இருந்து பூகம்பத்தின் நேரடி பதிவு..! “ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ matheen.mansoor.9
துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ mohamed.sahi.161
துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ Mohamatu Hasan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கற்பிப்பு’ எனும் வார்த்தையை ‘கற்பழிப்பு’ என்று பிழையாக பேசினாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

Factcheck / Verification

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்

இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிலநடுக்கம் ஜப்பானில் நடந்தது என்று குறிப்பிட்டு YR எனும் யூடியூப் பக்கத்தில் பிப்ரவரி 19, 2019 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

கூடவே இந்த வீடியோவின் அடிப்பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி மற்றும் எடுக்கப்பட்ட பகுதிக்கான லாங்க்டிட்யூட் மற்றும் லேட்டிட்யூட் தகவல் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்
Screengrab from YouTube video by YR

இந்த தகவல்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிலநடுக்கமானது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற்து என்பதை அறிய முடிந்தது. இதனையடுத்து இந்த நிகழ்வு எங்கே எடுக்கப்பட்டது என்று தேடினோம்.

வீடியோ எடுக்கப்பட்ட இடத்தை அறிதல்

YR யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோவின் அடிப்பக்கத்தில் இடம்பெற்றிருந்த லாங்க்டிட்யூட் மற்றும் லேட்டிட்யூட் தகவல்களை கூகுள் எர்த் வியூ பயன்படுத்தி அது எந்த இடத்திற்கு உரியது என்று தேடியதில், அது ஜப்பானின் டோக்யோ நகரம் என அறிய முடிந்தது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவை பயன்படுத்தி இப்பகுதி குறித்து தேடியதில் கிடைத்த தகவலை இங்கே காணலாம்.

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல்
(L-R) Screengrab from viral video and screengrab of Mukojima Line Sumida City, Tokyo from Google Earth View

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிலநடுக்கம் துருக்கியில் நடந்தது அல்ல, அது ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு நடந்ததாகும்.

Also Read: ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!

Conclusion

துருக்கி நிலநடுக்கத்தை காரில் உள்ள கேமராவில் படம் பிடித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த தகவலானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிர்சுரமாகியுள்ளது

Result: False

Sources

YouTube Video By Satoshi Saito, Dated April 10, 2011
YouTube Video By YR, Dated February 19, 2019
Google Earth View
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular