Fact Check
தேசிய தலைவர் திரைப்படத்தில் மேட்டுக்குடி மிராசாக நடிக்கின்றாரா கிஷோர் கே சாமி?
Claim
தேசிய தலைவர் திரைப்படத்தில் மேட்டுக்குடி மிராசாக நடிக்கின்றார் கிஷோர் கே சாமி.
Fact
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். தேசிய தலைவர் படத்தில் தான் நடிக்கவில்லை என்று கிஷோர் கே சாமியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இணையத்தள பிரபலம் கிஷோர் கே சாமி தேசிய தலைவர் திரைப்படத்தில் மேட்டுக்குடி மிராசாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check/Verification
தேசிய தலைவர் திரைப்படத்தில் மேட்டுக்குடி மிராசாக கிஷோர் கே சாமி நடிப்பதாக புகைப்படத்துடன் தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, கிஷோர் கே சாமியை தொடர்புக்கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம்.
அவர், “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. எனக்கும் அத்திரைப்படத்திற்கோ அல்லது அப்படக்குழுவிற்கோ எவ்வித தொடர்புமில்லை. வைரலாகும் படமும் போலியானது” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் படம் குறித்த உண்மையை அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரலாகும் படத்தில் காணப்படும் மற்றொரு நபரான திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் “தேசிய தலைவர் திரைப்படத்தில் உக்கிரபாண்டித்தேவராக நடிக்கும் அண்ணன் வாகை சந்திரசேகர்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அப்படத்தை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. நடிகர் வாகை சந்திரசேகரின் முகத்திற்கு பதிலாக கிஷோர் கே சாமியின் முகம் மாற்றப்பட்டு அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேடுகையில் ஏ.எம்.சௌத்ரி தேவரின் எக்ஸ் பக்கத்திலும் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தெளிவுப்படுத்தி பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
Conclusion
தேசிய தலைவர் திரைப்படத்தில் மேட்டுக்குடி மிராசாக கிஷோர் கே சாமி நடிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். கிஷோர் கே சாமி இத்தகவலை மறுத்துள்ளார்.
வைரலாகும் படமும் எடிட் செய்யப்பட்டதாகும். நடிகர் வாகை சந்திரசேகருடன் ஏ.எம்.சௌத்ரி தேவர் இருக்கும் படத்தை எடிட் செய்து அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Kishore K Swamy, Internet Personality
Facebook post from AM Choudry Thevar, Film Producer, dated December 11, 2023
X post from AM Choudry Thevar, Film Producer, dated July 1, 2025.