Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினை குறிப்பிட்ட நியூஸ் கார்டில் பதிவேற்றி, பிரபல தொலைகாட்சி ஒன்று கிஷோர் கே சாமி என்னும் யூடியூபரின் கைது குறித்து உருவ கேலி செய்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் யூடியூப் வீடியோக்கள் வெளியிடுபவரும்,குறிப்பிட்ட ஒரு கட்சி சார்பான நிலைப்பாட்டுடன் செயல்படுபவருமான கிஷோர் கே சாமி என்பவர் சமூக வலைத்தளங்களில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் இன்றைய தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரையும் பற்றி தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும், இழிவாக பேசியதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கிஷோர் கே சாமி கைது குறித்த செய்தியை நியூஸ் கார்டாக வெளியிட்ட பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அவரது புகைப்படத்திற்கு பதிலாக உருவ கேலியில் ஈடுபடும் வகையில் நல்லி எலும்பு புகைப்படத்தை இணைத்து செய்தி வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினைக் குறிப்பிட்டு கிஷோர் கே சாமி கைது செய்தியை பிரபல தொலைக்காட்சி நியூஸ் கார்டாக வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் குறித்து குறிப்பிட்ட தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அப்போது, கிஷோர் கே சாமி கைது குறித்த செய்தியில் சன் நியூஸ் அவரது உண்மையான புகைப்படத்தையே பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பது நமக்கு அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கம் மூலமாகத் தெரிய வந்தது.
மேலும், இதுகுறித்து சன் நியூஸ் செய்தியாளர்கள் சிலரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படம் போலியாக எடிட் செய்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வந்தது.
EDITED IMAGE
ORIGINAL IMAGE
எனவே, பகிரப்படும் அப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது நமக்குத் தெளிவாகிறது.
நல்லி எலும்பு புகைப்படம் ஒன்றினைக் குறிப்பிட்டு கிஷோர் கே சாமி கைது செய்தியை பிரபல தொலைக்காட்சி நியூஸ் கார்டாக வெளியிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sun News Tamil: https://www.facebook.com/SunNewsTamil/photos/4341840779205938
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 12, 2025