Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (11/09/2020) அன்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதன்பின் இச்செயற்குழுக் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியது.
இச்செய்தியானது இந்து தமிழ், புதிய தலைமுறை உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஊடகங்களில் வெளிவந்த இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.
ஊடகங்களில் வெளியான இச்செய்திக் குறித்து ஆராய்ந்தபோது, இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.
சென்னை மேற்கு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வீரபாண்டியன் அவர்கள் இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுக்குறித்த மறுப்புச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் இச்செய்தி நியூஸ்18, சமயம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கேட்டதாக ஊடகங்களில் வெளிவந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Pudhiya Thalaimurai: https://www.youtube.com/watch?v=h5lOjPRbUSc
News7 : https://twitter.com/news7tamil/status/1304414417333809153
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/577734-deputy-chief-minister.html
Channel Vision: https://twitter.com/iChannelVision/status/1304654557310382080
News 18: https://tamil.news18.com/news/tamil-nadu/did-chennai-west-congress-demand-deputy-cm-riz-344603.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)