Fact Check
டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim: டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம்
Fact: வைரலாகும் வீடியோவில் உண்மையில் பாபி பாபி என்கிற கோஷமே எழுப்பப்பட்டிருந்தது.
டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“அமெரிக்க தேர்தல் வெற்றி விழா முதல் உரையில் டிரம்ப் பேசும் போது “மோடி- மோடி” என்ற கோஷம். நான் ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன்.” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் எடிட் படம்!
Fact Check/Verification
டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் முழுமையான வெற்றி உரை குறித்து ஆராய்ந்தபோது உண்மையில் அந்த வீடியோவில் “பாபி பாபி” என்றே கோஷம் எழுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து Fox News வெளியிட்டிருந்த முழு உரையை ஆராய்ந்தபோது, Robert F Kennedy Junior அமெரிக்காவை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவார் என்று டிரம்ப் பேசும்பொழுது பின்னணியில் மக்கள் “Bobby Bobby” என்று கோஷமிடுகின்றனர்.
அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த Rober F kennady – யின் மகனான இந்த ராஃபர்ட் கென்னடி ஜூனியர் குறித்து டிரம்ப் பேசியபோது மக்கள் அவரது செல்லப்பெயரான ”Bobby” என்பதைக் குறிப்பிட்டு கோஷமெழுப்பியதையே தவறாக மோடி கோஷம் என்று பரப்பி வருகின்றனர். டிரம்ப் பேசிய உரையில் ஒரு பகுதியை மட்டும் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: இளம் பெண் போன்ற ரோபோ சீனத் தெருக்களில் சுற்றித்திரிவதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
டிரம்ப் வெற்றி உரையாற்றியபோது மோடி கோஷம் எழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Time report, November 6, 2024
The Guardian report, November 6, 2024
The Nightly report, November 6, 2024
NDTV report, November 6, 2024
Youtube video, November 6, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)