Fact Check
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Claim
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ
Fact
வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“அண்ணல் அம்பேத்கர் அவரகளை அவமதித்த
திமுக எம்எல்ஏ… திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியின் கண்களுக்கு அம்பேத்கர் புகைப்படம் மட்டும் தெரியவில்லை… #DMKFAILS இவங்க திருந்தவே மாட்டாங்க, இவங்களுக்கு வாக்களிக்கும் மக்களாகிய நாம் தான் சிந்திக்கனும் , திருந்தனும்….” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
Fact Check/Verification
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் கலைஞர், அண்ணா, பெரியார் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி வணங்கிய ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி அம்பேத்கர் புகைப்படத்திற்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை என்று இந்த வீடியோ பரவுகிறது.
எனவே, அதுகுறித்து ஆராய்ந்தபோது சென்னை திமுக அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “வெட்டி ஒட்டி பரப்புவது சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள், பொய்களை பரப்பி அதில் குளிர் காய்கிறார்கள். இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்!- Uncut video” என்று இந்த வீடியோவின் முழுமையான காட்சி இடம்பெற்றிருந்தது. அதில், அவர் முதலில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு மற்ற புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் காட்சி முழுமையாக இடம்பெற்றுள்ளது.
எனவே, குறிப்பிட்ட வீடியோவை எடிட் செய்தே திமுக எம்எல்ஏ மூர்த்தி அம்பேத்கரை அவமதித்ததாகப் பரப்பி வருகின்றனர்.
Also Read: முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறினாரா?
Conclusion
அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்த திமுக எம்எல்ஏ என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Chennai DMK, Dated April 15, 2025
X Post From, Galadriel 2.0, Dated April 15, 2025