ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeCoronavirusரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாவா?

ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாவா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திப் பரவி வருகிறது.

ரஞ்சன் கோகாய் குறித்து வந்த டிவிட்டர் பதிவு.

Fact Check/Verification

இந்தியாவில் அண்மைக் காலங்களில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வரும் நிகழ்வு, அயோத்தி இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா.

இந்த கொரானா ஊரங்குக் காலத்திலும், இந்நிகழ்வானது மிகவும் பரப்பரப்பாக கொண்டாடப்பட்டது.  இந்தியாவெங்கிலும் உள்ள பலக் கோடி மக்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் ராஜ்ய சபா உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் செய்திப் பரவியது.

இதுக்குறித்து, தினமணி, தினகரன், ஒன் இந்தியா உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி இணையத் தளங்களில் செய்தி வெளிவந்திருந்தது.

ரஞ்சன் கோகாய் குறித்து தினமணியில் வந்தச் செய்தி.
தினமணி செய்திக் குறிப்பு.
ரஞ்சன் கோகாய் குறித்து ஒன் இந்தியா தமிழில் வந்தச் செய்தி.
ஒன் இந்தியா செய்திக் குறிப்பு.
ரஞ்சன் கோகாய் குறித்து தினகரனில் வந்தச் செய்தி.
தினகரன் செய்திக் குறிப்பு.

உண்மை என்ன?

செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இச்சசெய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

நம் விரிவான ஆய்வுக்குப்பின் இச்செய்தியின் உண்மைத்தன்மை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா என்று வந்தச் செய்தி முற்றிலும் பொய்யாகும்.

நாம் கூகுளில் தேடியபோது, நீதித்துறைக் குறித்து மட்டும் செய்தி வெளிவிடும் இணையத் தளமான பார் அண்ட் பெஞ்சின் அதிகாரப் பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் இவ்விஷயம் குறித்து தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் நீதிபதி கோகாய் அவர்கள், அவர் குறித்து வைரலாகும் இச்செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

பார் அண்ட் பெஞ்சின் டிவிட்டர் பதிவு.

மேலும், தினத்தந்தி இணையத்தளமும் இச்செய்திப் பொய் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஞ்சன் கோகாய் குறித்து தினத்தந்தியில் வந்தச் செய்தி.
தினத்தந்தி செய்திக் குறிப்பு.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானா தொற்று  ஏற்பட்டுள்ளதாக வந்தச்செய்தி முற்றிலும் தவறானது என்று நமக்குத் தெளிவாகிறது.

Result: False


Our Sources

Twitter Profile: https://twitter.com/CoolSathish1520/status/1290937694533509120

Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=606926

Dinamani: https://www.dinamani.com/india/2020/aug/05/former-chief-justice-of-the-supreme-court-ranjan-gogoi-tests-positive-for-covid-19-3445915.html

Tamil One India: https://tamil.oneindia.com/news/delhi/former-chief-justice-of-india-ranjan-gogoi-tests-positive-for-coronavirus-393403.html

Bar and Bench: https://twitter.com/barandbench/status/1290705110905974784

Dailythanthi: https://www.dailythanthi.com/News/India/2020/08/05143655/Former-cji-ranjan-gogoi-tests-positive-for-covid19.vpf


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular