Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஆடிட்டர் குருமூர்த்தி சசிகலா அவர்களை ‘சாக்கடை நீர்’ என்று குறிப்பிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலை பெற்றிருந்தாலும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரானாவிலிருந்து விடுபட்ட சசிகலா விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
நேற்று(08/02/2021) சசிகலா பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த ஒருவரின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்தார்.
சசிகலா சென்னை வருகை குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் “சாக்கடை நீர் சென்னை வந்தது” என்று குறிப்பிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/wBQKT
Archive Link: https://archive.vn/RV3jQ
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குருமூர்த்தி சசிகலாவை ‘சாக்கடை நீர்’ என்று குறிப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினோம்.
லோட்டஸ் நியூஸின் புகைப்படச் செய்தியை அடிப்படையாக வைத்தே சசிகலாவை குருமூர்த்தி இழிவாகப் பேசினார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
ஆனால் வைரலாகும் புகைப்படச் செய்தியில் காணப்படும் டிசைன், எழுத்துறு(Font) போன்றவை லோட்டஸ் நியூஸின் வழக்கமாக பயன்படுத்தப்படும் டிசைன், எழுத்துறுக்களிலிருந்து வேறுபட்டிருப்பதை நம்மால் உணர முடிந்தது.
இதையும் தாண்டி லோட்டஸ் நியூஸில் வழக்கமாக குறிப்பிடப்படும் தேதியும் வைரலாகும் புகைப்படச் செய்தியில் காணப்படவில்லை.
ஆகவே வைரலாகும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படச் செய்தியாக இருக்குமோ எனும் சந்தேகம் நமக்குத் தோன்றியது.
இந்த சந்தேகத்தை தெளிவு செய்ய இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி லோட்டஸ் நியூஸில் வந்ததா என்பதை லோட்டஸ் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில் இவ்வாறு ஒரு செய்தி லோட்டஸ் நியூஸில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. இதன்பின் லோட்டஸ் நியூஸ் தரப்பினரைத் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்து கேட்டோம்.
லோட்டஸ் நியூஸ் தரப்பினர்,
“இச்செய்தியைத் தாங்கள் வெளியிடவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி”
என்று நம்மிடம் தெரிவித்தனர்.
ஆடிட்டர் குருமூர்த்தி சசிகலா அவர்களை ‘சாக்கடை நீர்’ என்று குறிப்பிட்டதாக வலைத்தளங்களில் பரப்பப்படும்புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/rangasami.sampathkumar.7/posts/1939430596219543
Facebook Profile: https://www.facebook.com/sivarajr74/posts/4178726202154900
Lotus News:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 17, 2021
Vijayalakshmi Balasubramaniyan
March 8, 2022
Ramkumar Kaliamurthy
February 11, 2021