Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வி.கே.சசிகலா என்னும் சசிகலா நடராஜன், திமுக தலைவரான ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன் என்று கூறியதாக ட்விட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.
வி.கே.சசிகலா என்னும் சசிகலா நடராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு திடீர் அரசியல் பிரவேசம், சொத்துக் குவிப்பு வழக்கில் கைது என்று பரபரப்பாக இருந்தவர், நான்காண்டு சிறைதண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் தினசரி செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக மற்றும் சசிகலா இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் சசிகலாவின் விடுதலையால், பல்வேறு அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
இச்சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தலே இன்னும் நடைபெறாத நிலையில், சசிகலா ‘சகோதரர் ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன்’ என்று ட்விட் வெளியிட்டதாக ஒரு சமூக வலைத்தளப்பக்கம் வைரலாகி வருகிறது.
Archived Link: https://archive.vn/SzVZp
அந்த ட்விட்டின் கீழேயே பலரும் இது உண்மையான ஐடியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இச்சமூக வலைத்தளப்பக்க ட்விட்டின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வி.கே.சசிகலா உண்மையிலேயே அப்படிக் கூறியிருந்தால், அவருடைய விசுவாசியும் உறவினரும் அரசியல்வாதியுமான டி.டி.வி தினகரன் அதனைத் தனது வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பார் என்பதால் அவரது பக்கத்தை ஆராய்ந்தோம்.
ஆனால், அவர் அப்படி எவ்வித பதிவையும் ஷேர் செய்யவில்லை. கடைசியாக, பிப்ரவரி 15 ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஒரு பதிவினை இட்டுள்ளார் தினகரன்.
தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தபோது அதன் பயோவில் ‘பரோடி, சிஸ்டர் ஆப் ஏ 1, மாபியா, எக்ஸ் ஸ்கேமர், ஜெயில் பறவை’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பதிவியேற்பு என்று தமிழ் வார்த்தை தவறாக எழுதப்பட்டுள்ளது.
இதிலிருந்தே, அப்பக்கம் கேலியான வகையில் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளப்பக்கம் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
Archived Page: https://archive.vn/w5t9J
மீம்ஸ் கிரியேட்டர்கள் போல, பொலிட்டிகள் சட்டயர்களை வெளியிடும் வகையில் வி.கே.சசிகலா என்னும் பெயரில் யாரோ உருவாக்கியிருக்கும் சமூக வலைத்தளப்பக்கம் அது என்பது தெரிய வருகிறது.
எனவே, குறிப்பிட்ட அப்பக்கம், வி.கே.சசிகலாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கம் இல்லை என்பதும் நமக்கு இதனால் தெரிகிறது.
வி.கே.சசிகலா, ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன் என்பதாக பகிரப்பட்டுள்ள ட்விட் உண்மையானதல்ல; கிண்டல் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒன்று என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
TTV Dinakaran: https://twitter.com/TTVDhinakaran
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
April 21, 2025
Ramkumar Kaliamurthy
March 27, 2025