Wednesday, June 18, 2025

Fact Check

ஜெயக்குமார் அவர்கள் கலைஞர் நினைவிடத்துக்கு சென்றவர்கள் அதிமுகவினர் அல்ல என்றாரா ?

banner_image

“கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல, உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து பரவும் பதிவு
Source: Twitter

Fact Check/Verification

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாபெரும் நினைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தைக் காண தமிழகம் முழுவதிலிருந்து பல்லாயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களுள் சிலர் அருகிலிருந்த கலைஞர் நினைவிடத்தையும் பார்வையிட்டனர். இது ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது.

இந்நிகழ்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்,

“கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல, உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்”

என்று கூறியதாக புதிய தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி  வருகின்றது.

https://twitter.com/Iam_SuMu/status/1354391935096512519

Archive Link: https://archive.vn/PlxXf

Archive Link:https://archive.vn/LUPQO

சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படச் செய்தியை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வைரலானப் பதிவு.
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

முதலில் ஜெயக்குமார் அவர்கள் இவ்வாறு பேசியதாக மற்ற ஊடகங்களில் செய்தி வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். அதில் ஜெயக்குமார் அவர்கள் இவ்வாறு பேசியதாக எந்த ஊடகங்களிலும் செய்தி வரவில்லை என்பதை நம்மால் அறிய முடிந்தது.

மற்ற எந்த ஊடகத்திலும் வராத ஒரு செய்தி புதிய தலைமுறையில்  மட்டும் எவ்வாறு வந்திருக்க முடியும் எனும் சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.  ஆகவே வைரலாகும் அந்த புகைப்படச் செய்தியை கூர்மையாக உற்று நோக்கினோம்.

அவ்வாறு செய்ததில் அப்புகைப்படச் செய்தியில் புதிய தலைமுறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துறு(Font) பயன்படுத்தப்படவில்லை என்பதை நம்மால் அறிய முடிந்தது. டிசைனிலும் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்கள் காணப்பட்டது.

இதை தவிர்த்து, புதிய தலைமுறை புகைப்படச் செய்திகளில்,  வழக்கமாக பயன்படுத்தப்படும் புதிய தலைமுறை லோகோ வாட்டர் மார்க்கும் அதில் காணப்படவில்லை.

ஆகவே இப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்தியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.

நம் சந்தேகத்தை தெளிவு செய்ய, புதிய தலைமுறையில் உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தி வெளிவந்ததா என்பதைத் தேடினோம். ஆனால் இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

அடுத்ததாக இச்செய்திக் குறித்து புதிய தலைமுறை தரப்பினரைத் தொடர்புக் கொண்டுக் கேட்டோம். அவர்கள் இச்செய்தி தவறான ஒன்று என்பதை நமக்கு உறுதி செய்தி செய்தனர்.

Conclusion

“கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல, உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியதாக வைரலானப் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Twitter Profile: https://twitter.com/Iam_SuMu/status/1354391935096512519

Twitter Profile: https://twitter.com/RaajaSrinivaas1/status/1354393688231661570

Malai Murasu: https://twitter.com/MalaimurasuTv/status/1354395779079626758

Puthiya Thalaimurai Helpdesk


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

18,653

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage