Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகை குஷ்பு அவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கவர்ச்சி நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் கூறியதாக, தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், குஷ்புவை கவர்ச்சி நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தனர் என்று கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாகவும், காங்கிரஸ் தொண்டர்களை, பெண்களை இதை விட கேவலப்படுத்த முடியாது என்றும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இச்செய்தியைப் பகிர்ந்து, இதுக்குறித்தத் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகிய, இந்த சர்ச்சைக்குரியக் கருத்தை உண்மையாகவே காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசினாரா என்பதை உறுதிப்படுத்த, நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. சினிமாவுக்குப் பிறகு அரசியல் என்ற தமிழகத்தின் எழுதப்படாத விதிக்கு இணங்க, இவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசியலில் இறங்கினார்.
முதலில் திமுகவில் இணைந்த இவர், கடந்த 2014-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவருக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவித் தரப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி அன்று குஷ்பு அவர்கள் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இச்செய்தியானது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான்,”குஷ்பு அவர்களை காங்கிரஸ் கட்சியினர் ‘கவர்ச்சி நடிகையாகத்தான் பார்த்தார்கள்” என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் கூறியதாகச் செய்தி ஒன்று வைரலானது.
பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, கே.எஸ்.அழகிரி அவர்கள் இவ்வாறு பேசியதாக ஊடகங்களில் ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்பதை முதலில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில் நியூஸ் 18, புதிய தலைமுறை உட்பட சில ஊடகங்களில் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
ஆனால் அவற்றில் அழகிரி அவர்கள், குஷ்புவை நடிகை என்றுக் குறிப்பிட்டதாகவே இருந்தது. எந்த இடத்திலும் ‘கவர்ச்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கே.எஸ். அழகிரி அவர்கள் கலந்துக்கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ ஒன்றை, ஜெயா பிளஸ் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அவ்வீடியோவில், குஷ்பு அவர்களை காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் பார்த்தார்களேயொழிய ஒரு அரசியல் தலைவராக அவரை யாரும் கருதவில்லை என்ற கருத்தை அழகிரி அவர்கள் கூறியிருந்தார். ஆனால் அழகிரி அவர்கள் பேசும்போது, எந்த இடத்திலும் கவர்ச்சி என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை.
அவ்வீடியோ உங்களுக்காக:
நமது விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால்,
Twitter Profile: https://twitter.com/Narayanan3/status/1315525096178475009
Jaya Plus: https://www.youtube.com/watch?v=JrBR8EFjdmc
Puthiya Thalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/photos/1981510792005819
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
January 6, 2021
Ramkumar Kaliamurthy
October 17, 2020