Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
குஷ்பு அவர்கள் கடந்த அன்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் பிறகு குஷ்பு அவர்கள் கட்சி மாறியதைக் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமான கேலிக்கு உள்ளாகி வருகிறார்.
அவர் காங்கிரஸ் கட்சியிலிருக்கும்போது பாஜகவுக்கு எதிராகவும், மோடி அவர்களுக்கு எதிராகவும் பேசிய பேச்சுகள் மற்றும் பகிர்ந்த டிவீட்டுகளைத் தேடிப்பிடித்துப் பகிர்ந்து, அவரை பலமாகக் கிண்டலடித்து வருகின்றனர்.
இதன் வரிசையில், தற்போது குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடித்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதனை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
வைரலாகும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அண்மையில் இதுக்குறித்த செய்தி ஏதேனும் முக்கிய ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதை ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் அண்மையில் இதுப்போன்ற சம்பவம் நடந்ததாகச் செய்தி ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டு இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கான செய்திகளை நம்மால் காண முடிந்தது.
2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக குஷ்பு அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
அவ்வாறு பிரச்சாரம் செய்யும்போது காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரிடம் சில்மிஷம் செய்தார். உடனே குஷ்பு அந்த இடத்திலேயே அவனை அறைந்தார். இந்த விஷயமானது அப்போது கர்நாடகாவில் மிகப் பரப்பாகப் பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோவானது வைரலானது.
THE WEEK உள்ளிட்ட ஊடகங்கள் இதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தன.
தமிழ் ஊடகமான சினி உலகத்திலும் இந்த வீடியோ குறித்துச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஒரு வருடத்திற்கு முன்பு சினி உலகத்தில் வந்த இந்த வீடியோவை எடுத்துதான், குஷ்பு பாஜகவினரை அடித்தார் என்று பொய்யானச் செய்தி தற்சமயம் பரப்பப்படுகிறது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், குஷ்பு அவர்கள் பாஜகவினரை அடிக்கவே இல்லை. குஷ்பு பாஜகவினரை அடித்ததாக பரவும் வீடியோவில் இருக்கும் சம்பவமானது, ஒரு வருடத்திற்கு முன்பு கர்நாடகாவில் நடந்ததாகும். அதை வேண்டுமென்றே திரித்துத் தவறாகப் பரப்புகின்றனர்.
ஆகவே வாசகர்கள் யாரும் இந்த வீடியோவை உண்மை என்று நம்பி யாருக்கும் பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Twitter Profile: https://twitter.com/RPARI12/status/1315975580781703168
Twitter Profile: https://twitter.com/salahudeentntj/status/1315983221713104897
Facebook Profile: https://www.facebook.com/307019889946653/videos/371997740510065/
Twitter Profile: https://twitter.com/kedi20201/status/1316012262436421635
Cine ulagam: https://www.youtube.com/watch?v=_db8dBnldBg
Twitter Profile: https://twitter.com/sagayrajp/status/1116044322862981120
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
January 6, 2021
Ramkumar Kaliamurthy
October 16, 2020