Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் திருத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் இரண்டு முறை எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் எரிவாயு சிலிண்டர் சென்னையில் 785 ரூபாய்க்கும், டெல்லியில் 769 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சமையல் எரிவாயுவின் இந்த விலையேற்றத்தினால் அரசு மீது மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/aSwiX
Archive Link: https://archive.vn/JM5t1
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
“நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
பாலிமர் நியூஸின் புகைப்படச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
ஆகவே அப்புகைப்படச் செய்தியை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். இவ்வாறு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியானது எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
மக்களவையில் மத்திய பட்ஜெட் குறித்து ஏற்பட்ட விவாதத்தில், ஏழை மக்களுக்கான அரசாக மோடி அரசு செயல்படுகின்றது என்றும், பெரு முதலாளிக்களுக்கான ஆட்சியை நடத்தியது காங்கிரஸ் தான்.” என்றும் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதுக்குறித்த செய்தி பாலிமர் நியூஸில் புகைப்படச் செய்தியாக வெளி வந்திருந்தது.
இந்தப் புகைப்படச் செய்தியை எடிட் செய்தே, “நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிர்மலா சீதாராமன் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர்களில் புரிதலுக்காக உண்மையான புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
“நான் ஹோட்டலில் சாப்பிடுவதால் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி கவலை இல்லை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/offl_trollmafia/status/1361202616739373060
Facebook Profile: https://www.facebook.com/arputharaj.arputharaj.9619/posts/1083819785460470
Polimer News: https://www.facebook.com/polimernews/posts/3742150285903807
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
May 8, 2023
Vijayalakshmi Balasubramaniyan
February 2, 2022