Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சேலம்-சென்னைக்கு இடையே பத்தாயிரம் கோடி செலவில் எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டங்கள் வெடித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏறக்குறைய 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் வருவாய் நிலங்களாக வகை மாற்றம் செய்யப்பட்டதாக கூறி இருந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பு, அவற்றை வருவாய் நிலங்களாக வகைமாற்றம் செய்ய முடியாது என்று அறிவித்தனர்.
மீண்டும் நில உரிமையாளர்களின் பெயருக்கே அந்நிலங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதுவும் இதனை எட்டு வாரங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நெடுங்சாலைத் துறையும் தமிழகம் அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் நேற்று(08/12/2020) தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்ததாக கூறி, ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் பதிவிட்டிருந்தார்.
இதே கருத்தை மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் உள்ளிட்டோர் பதிவிட்ட தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது என சமூக வலைத்தளங்களில் பரவியக் கருத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அதுக்குறித்து ஆழமாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தகவல் முற்றிலும் தவறானது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் உச்சநீதிமன்றமானது, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எவ்விதமான தடையும் விதிக்கவில்லை.
“எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திருப்பி தர வேண்டும். சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். இதன்பின் புதிதாக அரசாணை பிறப்பித்து, அதன்பின் இத்திட்டத்தை தொடரலாம்”
என்றே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
(உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரதி வாசகர்களின் பார்வைக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது)
இதன்படி பார்க்கையில், உச்ச நீதிமன்றம் எட்டு வழிச்சலைத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பரப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று நமக்கு தெளிவாகிறது.
நம் தேடலில் புதிய தலைமுறை, சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் முதலில் இதே தவறானச் செய்தியை வெளியிட்டு, பின்பு அதை நீக்கி, சரியான செய்தியை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக சன் நியூஸில் வந்த செய்திகளை கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதேபோல் புதிய தலைமுறையில் வந்தச் செய்திகளையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததாக திருமாவளவன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த தகவலானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Tho. Thirumavalavan: https://twitter.com/thirumaofficial/status/1336182295573610501
Twitter Profile: https://twitter.com/pavalanvck/status/1336205417714610176
Twitter Profile: https://twitter.com/Thamaraivannan6/status/1336206781874245635
Supreme Court of India: https://main.sci.gov.in/supremecourt/2019/19781/19781_2019_35_1501_25026_Judgement_08-Dec-2020.pdf
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 2, 2025
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
December 16, 2024