Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசினாரா?

Written By Ramkumar Kaliamurthy
Oct 22, 2020
banner_image

‘எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என்று திருமாவளவன் அவர்கள் கூறியதாகத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருமாவளவன் குறித்து வைரலானப் பதிவு.

Fact Check/Verification

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமாக விளங்கும் திருமாவளவன் அவர்கள் மீது விமர்சனங்கள் வைப்பதும், அவரைப் பரிகாசம் செய்வதும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும்.

இப்போது அவர் ‘எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என்று கூறியதாகக் கூறி, அவருக்கெதிரான கண்டனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாஜகவைச் சார்ந்த CTR நிர்மல் குமார், கல்யாண் போன்றவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1318969181690163200
https://twitter.com/Chanakya_Neethi/status/1318826713602695168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1318826713602695168%7Ctwgr%5Eshare_3%2Ccontainerclick_1&ref_url=https%3A%2F%2Fpawanpandey.in%2F2020%2F10%2F21%2Fdalit-mla-from-tamil-nadu-says-that-hindu-women-are-prostitutes%2F
https://twitter.com/BjpKalyaan/status/1319127559213174786

சமூக வலைத்தளங்களில் கூறுவதுபோல்,  உண்மையிலேயே திருமாவளவன் அவர்கள் பெண்களுக்கு எதிராக இவ்வாறு கூறினாரா என்பதை உறுதி செய்ய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இத்தகவலை ஆய்வு செய்தோம்.

உண்மை என்ன?

திருமாவளவன் அவர்கள் பேசிய ஒரு வீடியோ கிளிப்பின் அடிப்படையிலேயே இவ்வாறான ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடம் வரை ஓடும் அந்த வீடியோக் கிளிப்பைக் கூர்ந்துக் கவனித்தபோது, திருமாவளவன் அவர்கள் சனாதனத்தில் பெண்கள் குறித்துக் கூறப்படுவதாகக் கூறி சிலக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்பதை மட்டுமே அறிய முடிந்தது.

ஆனால் அக்கருத்துகளை அவர் ஆதரித்துப் பேசுகிறாரா? அல்லது எதிர்த்துப் பேசுகிறாரா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இந்த வீடியோக் கிளிப்பை முழுமையாகக் கண்டால் மட்டுமே இதற்கான விடை நமக்கு கிடைக்குமென்பதால் அவ்வீடியோவின் முழுப்பகுதியைத் தேடினோம்.

அவ்வாறுத் தேடியதில்  பெரியார் வலைக்காட்சி (Periyar TV) எனும் யூடியூப் சேனலில், ‘சனாதனத்தைப் புரிந்துகொள்ளாமல் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாது!’  எனும் தலைப்பில் இவ்வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அவ்வீடியோ உங்களுக்காக:

COURTESY: PERIYAR TV

மேற்கண்ட வீடியோவின் மூலம், திருமாவளவன் அவர்கள், சனாதனத்தில் இவ்வாறு பெண்களை இழிவாகப் பேசுகிறார்கள், இவ்வாறு அடிமைப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறாரே தவிர, நேரிடையாகப் பெண்கள் குறித்து எதுவும் தவறாகப் பேசவில்லை என்பது நமக்குத் தெளிவாகிறது.

மேலும், திருமாவளவன் அவர்கள் சனாதனம் குறித்துப் பேசியக் கருத்துகளை, உண்மைக்குப் புறம்பாக, அவர் பேசியதாகத் திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர் என்ற உண்மையையும் நம்மால் உணர முடிகிறது.

Conclusion

நியூஸ்செக்கர் தமிழின்  இந்த விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால்,

  • திருமாவளவன் அவர்கள் பெண்கள் குறித்துத் தவறாகப் பேசவே இல்லை.
  • சனாதனம் குறித்து அவர் பேசியக் கருத்துகளை, அவரின் சொந்தக் கருத்தாகத் திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்.

Result: Misleading

Our Sources

CTR Nirmal Kumar: https://twitter.com/CTR_Nirmalkumar/status/1318969181690163200

Kalyan: https://twitter.com/BjpKalyaan/status/1319127559213174786

Periyar TV: https://www.youtube.com/watch?v=62rXrhLtPvw


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.