ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று வைகோ கூறினாரா?

கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று வைகோ கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கனிமொழி குறித்து வைகோ கூறியதாக வைரலான பதிவு.
வைரலானப் பதிவு.

Fact Check/Verification

சென்னை விமான நிலையத்தில், கனிமொழி அவர்கள் தன்னுடன் இந்தியில் பேசிய மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை(CISF) அதிகாரியிடம், தனக்கு இந்தித் தெரியாது, தமிழ் அல்லது  ஆங்கிலத்தில் பேசுமாறுக் கேட்டதற்கு, நீங்கள் இந்தியரா? என்று அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை தன் டிவிட்டர் பக்கத்தில், கனிமொழி அவர்கள் தெரிவித்திருந்தார்.

கனிமொழி அவர்களின் டிவீட்.

இதன்பின் இவ்விஷயம் இந்திய அளவில் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியது. இந்திய ஊடகங்கள் பலவற்றில் இதுக்குறித்து செய்திகள் வெளிவந்தது.

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை இச்சம்வத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, இது சம்மந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கு கனிமொழி அவர்களின்  பயணம் குறித்தத் தகவல்களையும் கேட்டிருந்தது.

CISF -ன் பதில் டிவீட்.

இந்நிலையில் வைகோ அவர்கள்  கனிமொழி அவர்களுக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உள்ளது என்று கூறியதாகப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய  நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

வைரலாகும் செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, வைகோ இவ்வாறு கூறினாரா என்பதை அறிய கூகுளில் தேடியபோது, இதுக்குறித்த செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்துத் தமிழில், விமான நிலைய சம்பவத்துக்கு தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

கனிமொழி விவகாரம் குறித்து இந்து தமிழில் வந்தச் செய்தி.
இந்து தமிழில் வந்தச் செய்தி.

ஆனால் அதிலும், வைகோ அவர்கள் கனிமொழிக் குறித்துப் பேசியதாக எந்தத் தகவலும்  தரப்படவில்லை.

 வைரலானத் தகவல் புதியத் தலைமுறையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்ததாக இருந்ததால், புதியத் தலைமுறையின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்துத் தேடினோம். இத்தேடலில் வைரலான செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்த நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில், புதிய தலைமுறை வைரலாகும் செய்தியை வெளியிடவே இல்லை. “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடிமுதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம்” என்று வைகோ அவர்கள் கூறியதாகவே செய்தி வெளியிட்டிருந்தது.

புதிய தலைமுறை டிவீட்.

இச்செய்தியே எடிட் செய்யப்பட்டு, கனிமொழிக்கு திமுக முதல்வர் ஆகும் தகுதி உண்டு என்று வைகோ பேசியதாக செய்திப் பரப்பப்பட்டுள்ளது என்று நம் ஆய்வின் மூலம் உணர முடிகிறது.

வைரலானப் பொய் செய்தியையும் உண்மையான செய்தியையும் வாசகர்களின் புரிதலுக்காகக் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் வைகோ அவர்கள் கனிமொழிக்கு திமுக முதல்வர் ஆகும் தகுதி உண்டு என்று கூறியதாகப் பரவியப் பதிவு முற்றிலும் பொய் என்று நமக்குத் தெளிவாகிறது.

Result: False


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=2626501827637478&set=gm.1394780234248162

Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/569111-kanimozhi-issue-vaiko-condemns-hindi-imposition.html

Twitter Profile: https://twitter.com/hsejarsa/status/1292796419955281920

Twitter Profile: https://twitter.com/Rajinijhonny/status/1293029049359507456

Kanimozhi Twitter Profile: https://twitter.com/KanimozhiDMK/status/1292376834177261568

CISF Twitter Profile: https://twitter.com/CISFHQrs/status/1292399086360866822

Puthiyathalamurai Twitter Profile: https://twitter.com/PTTVOnlineNews/status/1292709520968314880


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular