ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழகத்தின் பெயரை ‘கருணாநிதி நாடு’ என்று மாற்றுவோம் என்றதா திமுக தேர்தல் அறிக்கை?

தமிழகத்தின் பெயரை ‘கருணாநிதி நாடு’ என்று மாற்றுவோம் என்றதா திமுக தேர்தல் அறிக்கை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழகத்தின் பெயரை கருணாநிதி நாடு என்று மாற்றுவோம் என்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தின்
Source: Twitter

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபக்கம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முந்தையை முன்னேற்பாடுகளில் மும்முரமாக உள்ள நிலையில், மறுபக்கம் தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கை, பரப்புரைக்களம், விளம்பரங்கள் என்று கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு கட்சியாக தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் என்கிற பெயரில் போலியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஏற்கனவே, பாஜக தேர்தல் அறிக்கை என்கிற பெயரில் பரவிய புகைப்படங்களை நாம் சித்தரிக்கப்பட்டவை என்று உண்மைச்சோதனையில் நிரூபித்திருந்தோம்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் பெயர், கருணாநிதி நாடு என்று மாற்றம் செய்யப்படும் என்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Twitter

Archived Link: https://archive.ph/ZN8KV

Source: Twitter

Archived Link: https://archive.ph/3VSNA

Source: Twitter

Archived Link: https://archive.ph/KRfwK

சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

தமிழகத்தின் பெயரை கருணாநிதி நாடு என்று மாற்றுவோம் என்பதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய முதலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்தோம்.

அந்த அறிக்கையில், தமிழகத்தின் பெயர் கருணாநிதி நாடு என்பதாக மாற்றப்படும் என்று எந்தவித வாக்குறுதியும் இடம்பெறவில்லை.

மேலும், இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்து பார்த்து, குறிப்பிட்ட அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.

தொடர்ந்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதிப் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில் அதில் தமிழகத்தின் பெயர் கருணாநிதி நாடு என்று மாற்றப்படும் என்று எவ்வித வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. திமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மூலமாக குறிப்பிட்ட அப்புகைப்படம் போலியாகப் பரவுகிறது என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

Source: Twitter

திமுக தேர்தல் வாக்குறுதி புகைப்படத்தை எடிட் செய்து குறிப்பிட்ட அந்த பெயர் மாற்றம் செய்யும் வாக்குறுதிப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

தமிழகத்தின்
Original

உண்மையான புகைப்படம்

தமிழகத்தின்
Edited

எடிட் செய்யப்பட்ட புகைப்படம்

Conclusion:

தமிழகத்தின் பெயர் கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources:

DMK: https://twitter.com/arivalayam/status/1371709489380954112?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular