Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்தது.
இத்தகவல் தவறானதாகும். அந்த காவலர் நிகழ்ச்சியை செய்யக்கூடாது என்று தடுக்கவில்லை. குழந்தைகளை யானையிடமிருந்து தள்ளி இருக்கவே கூறினார்.
“தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று சொன்ன காவலாளியை யானை விரட்டியது. ஆனால் இன்று இருக்கும் திராவிட கழகத்தை வரும் 2026 மக்கள் விரட்ட வேண்டும், மிருகத்துக்கு இருக்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும் நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அஇஅதிமுக 142 இடங்களை பிடிக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்த உண்மையை அறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் விஸ்வவாணி நியூஸ் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் கர்நாடகாவின் தச்சின கர்நாடகா பகுதியில் இருக்கும் குக்கே சுப்ரமணியா கோவிலில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளும் பக்தர்களும் யானை மீது நீர் தெளித்து விளையாடியதாகவும், அதற்கு யானையும் தும்பிக்கையின் மூலம் நீர் தெளித்து விளையாடியதாகவும், இச்சமயத்தில் காவலர் பாதுகாப்புக்காக பக்தர்களுக்கும் யானைக்கும் இடையில் வந்ததாகவும், இதனால் எரிச்சலடைந்த யானை காவலரை தூக்கி எறிந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தேடுகையில் டிவி9 கன்னடா, நியூஸ்18 கன்னடா உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து குக்கே சுப்ரமணியா பகுதியில் உதயவாணி நாளிதழின் பத்திரிக்கையாளராக இருக்கும் தயானந்தாவை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம்.
யானைகளுடன் விளையாடிய குழந்தைகளை காவலர் தள்ளி போக கூறியதாலேயே யானை காவலரை கீழே தள்ளியதாக தயானந்தா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குக்கே சுப்ரமணியா கோவிலின் நிர்வாக கமிட்டியின் தலைவர் ஹரிஷ் இஞ்சாடியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு பேசினோம்.
அவர் இச்சம்பவம் வருடாந்திரம் நடக்கும் பண்டி உத்சவாவின்போது நடந்ததாக தெரிவித்தார். அவரும் யானை குழந்தைகளுடன் விளையாடியபோது காவலர் குறுக்கிட்டாதாலேயே யானை அவரை தள்ளியதாக தெரிவித்தார்.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
Also Read: பெரிய பந்து போல பொழியும் ஆலங்கட்டி மழை; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Viswavani, dated December 3, 2025
Phone Conversation with Dayananda, Reporter, Udayavani Daily, From Kukke Subrahmanya
Phone Conversation with Harish Injady, President, Temple Management Committee, Kukke Subrahmanya
Ramkumar Kaliamurthy
December 3, 2025
Ramkumar Kaliamurthy
December 1, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025