இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?
Fact Check/Verification
இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக ரங்காராஜன் நரசிம்மன் என்பவர் இவ்வாறு ஒரு வழக்கை முறையீடு செய்தாரா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் ரங்கராஜன் நரசிம்மன் கடந்த 2018 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கிட்டதையும், அவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து தீர்ப்பு அளித்திருந்ததையும் அறிய முடிந்தது.

இதனையடுத்து தொடர்ந்து தேடியதில் , “நான் நலமாக உள்ளேன். திமுகவினர் என்னை அடித்ததாக பரவும் வீடியோ பொய்யானது. கடந்த ஏப்ரலில் திருச்சி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் என்னை தாக்கினர். ஆனால் அந்த நிகழ்வுக்கும் வைரலாகும் வீடியோவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று குறிப்பிட்டு ரங்கராஜ் நரசிம்மன் டிவீட் ஒன்றை செய்திருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் திருச்சி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் தன்னை தாக்கியதாக ஏப்ரல் 25, 2022 அன்று ரங்கராஜன் நரசிம்மன் வீடியோ ஒன்றை அவரது டிவிட்டரில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவானது வைரலாகும் வீடியோவிலிருந்து முழுவதும் வேறுபட்டிருந்தது.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். அதில் இவ்வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.
பைரி நரேஷ் என்பவர் இந்துக்களின் கடவுளான ஐயப்பன் சுவாமி குறித்து தவறான கருத்தை கூறியதால் அவருக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரப்பப்பட்டு வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் வீடியோவையும் தெலங்கானா ஆர்ப்பாட்ட வீடியோவையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?
Conclusion
இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet from @OurTemples dated January 03, 2022
Youtube Video from NTV Telugu dated December 31, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)