ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிக்கை வெளியிட்டது.

Fact: வைரலாகும் அறிக்கை எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது உண்மையே. ஆனால் ஆண், பெண் என்றோ, உயர்சாதி, இடையின சாதி என்றோ எந்த ஒரு பேதமையும் அதில் குறிப்பிட்டிருக்கவில்லை.

“தேவர், வன்னியர், கவுண்டர், செட்டியார், நாடார், முதலியார், பிள்ளை, பண்ணையார், முத்தரையர், கோனார் மற்றும் பிற உயர் சாதி வீட்டு பெண்களை காதல் திருமணம் செய்யும் பறையர் சமூக இளைஞர்களுக்கு ஊக்க தொகையாக 1 பவுன் தங்க காசு மற்றும் 60,000 பணம் வழங்கப்படும்” என்று 2021 சட்டபேரவைத் தேர்தலின்போது திமுக அறிக்கையில் 259-ஆவது அறிக்கையாக தெரிவிக்கப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு

X Link | Archive Link

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிக்கை வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து அந்த கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப்பக்கங்களில் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக அறிக்கையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் இந்த நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.  வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் 259 அறிவிப்பாக என்ன அறிவிக்கப்பட்டது என்பது குறித்து அறிய, திமுகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை ஆராய்ந்தோம். அதில் 2021 தேர்தல் அறிக்கையை கண்டறிய முடிந்தது. அந்த அறிக்கையில் 259 அறிவிப்பாக அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்  குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவன,

கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும்.

கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கக் காசும் வழங்கப்படும்.

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு
Screengrab from 2021 DMK Manifesto

இந்த அறிக்கையில் உயர்சாதியினர் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பிற இனத்தவர் என்றே குறிப்பிட்டிருந்தது.  அதாவது ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் தவிர்த்த மற்ற இனத்தவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவரும் அடங்குவர்.

அதேபோல் பெண்ணை திருமணம் செய்யும் ஆண் என்றும் குறிப்பிடப்படவில்லை. மணமக்களில் ஒருவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி பார்க்கையில் அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்.  

இதன்படி பார்க்கையில் கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டத்திற்கு வேறு வித சாயம் பூசி தவறான கருத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.

 Also Read: கேரளாவில் பாலை ஹலால் செய்ய முஸ்லீம் ஒருவர் பாலில் குளித்தாரா?

Conclusion

உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from M.K.Stalin, Chief Minister of Tamilnadu, Dated March 14, 2021
DMK 2021 Manifesto

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular