Fact Check
உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?
Claim: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிக்கை வெளியிட்டது.
Fact: வைரலாகும் அறிக்கை எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது உண்மையே. ஆனால் ஆண், பெண் என்றோ, உயர்சாதி, இடையின சாதி என்றோ எந்த ஒரு பேதமையும் அதில் குறிப்பிட்டிருக்கவில்லை.
“தேவர், வன்னியர், கவுண்டர், செட்டியார், நாடார், முதலியார், பிள்ளை, பண்ணையார், முத்தரையர், கோனார் மற்றும் பிற உயர் சாதி வீட்டு பெண்களை காதல் திருமணம் செய்யும் பறையர் சமூக இளைஞர்களுக்கு ஊக்க தொகையாக 1 பவுன் தங்க காசு மற்றும் 60,000 பணம் வழங்கப்படும்” என்று 2021 சட்டபேரவைத் தேர்தலின்போது திமுக அறிக்கையில் 259-ஆவது அறிக்கையாக தெரிவிக்கப்பட்டதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

