ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇந்தியாவில் முதன்முதலில் கட்சிசார் இளைஞர் அணியைத் தொடங்கியது திமுகவா?

இந்தியாவில் முதன்முதலில் கட்சிசார் இளைஞர் அணியைத் தொடங்கியது திமுகவா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்தியாவில் முதன்முதலில் இளைஞர் அணியைத் துவங்கியது திமுகதான் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவில்
Source: Facebook

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதியன்று திமுகவின் இளைஞரணி மதுரை ஜான்சிராணி பூங்காவில், திமுக மூத்த தலைவர் கருணாநிதியால் துவங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை திமுகவின் இளைஞரணி அமைப்பாளராகத்தான் முழுமூச்சில் துவங்கினார்.

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி துவங்கப்பட்டு 41 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், “இந்தியாவிலேயே முதன்முதலாக அரசியல் கட்சிக்கான இளைஞர் அணியை அமைத்தது திமுகதான்” என்கிற வாசகங்களுடன் வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில்
Source: Facebook

Facebook Link

இந்தியாவில்
Source: Facebook

Facebook Link

இந்தியாவில்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

இந்தியாவில் முதன்முறையாக கட்சி சார்ந்த இளைஞர் அணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தேசிய அளவிலான கட்சிகளின் இளைஞர் அணிகள் குறித்த தேடுதலை நாம் மேற்கொண்டபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரிவான இளைஞர் காங்கிரஸ் தோற்றம், உருவாக்கம் குறித்த தகவல்கள் அவர்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

அதில், 1950களுக்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணிப் பிரிவுக்கான கொடி, இலச்சினை ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1950 மற்றும் 1960களில் நடைபெற்ற இரண்டு முக்கியமான கூட்டங்களைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் மேலும் வலுப்பெற்றது. முக்கியமாக, 1960ல் நடைபெற்ற பஞ்மர்கி கூட்டத்தில் இருந்தே இளைஞர் காங்கிரஸிற்கான முதன்மையான கொள்கை முடிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, 1960களில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி இந்தியாவில் இருந்து வருவது இதன்மூலமாகத் தெரிகிறது.

தொடர்ந்து, பாஜகவின் இளைஞரணி குறித்து ஆராய்ந்தபோது ‘பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா’ 1978 ஆம் ஆண்டே துவங்கப்பட்டுள்ளது. அப்போதைய தலைவராக அமர்ந்தவர் தற்போதைய ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ராஜ்பவன் ராஜஸ்தான் மற்றும் கல்ராஜ் மிஸ்ராவின் பிரத்யேக இணையதளப்பக்கத்திலும் இடம்பெற்றுள்ளன.

மேலும், திமுக சார்ந்த செய்திப்பிரிவான கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பிலும் “இந்திய அரசியலில் மாநிலக் கட்சி ஒன்று தொடங்கிய முதல் இளைஞரணி திமுக இளைஞரணிதான்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் மாநிலங்கள் அளவில் கட்சி ஒன்று இளைஞரணி தொடங்கியது என்றால் அது திமுகவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Youtube

மேலும், திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் “இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநில கட்சிகளில் முதல்முறையாக தொடங்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் செயலாளர் பொறுப்பை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றார்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Twitter

இதிலிருந்து, மாநிலக் கட்சிகளில் தேசிய அளவில் முதன்முதலாக இளைஞர் அணி அமைத்தது திமுக; ஆனால், தேசிய அளவில் முதல் இளைஞரணி அமைப்பு திமுகவுடையது அல்ல என்பது தெளிவாகிறது.

Conclusion:

இந்தியாவில் முதன்முறையாக கட்சி சார்ந்த இளைஞர் அணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்று பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

YouTube: https://www.youtube.com/watch?v=wjPOdKuV108

Kalaignar News: https://www.kalaignarseithigal.com/dmk/2019/07/20/important-day-in-dmk-youth-wing-history

DMK Youth wing: https://twitter.com/dmk_youthwing?lang=en

Indian Youth Congress: https://iyc.in/our-story/

Kalraj Mishra: http://kalrajmishra.com/

Raj Bhawan Rajasthan: https://rajbhawan.rajasthan.gov.in/content/rajbhawan/en/knowthegovernor.html

DMK IT Wing: https://twitter.com/arivalayam/status/1417366661774987264?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular