மருத்துவர்கள், ஆண்கள் தங்களது ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலமாக தடுப்பூசி விரைவாக உடல் முழுவதும் பரவுவதற்கு எளிதாக இருக்கும் என்று கூறியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று வைரலாகியது.

Fact Check/Verification:
2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள்/பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகத் துவங்கி விட்டன.
அதில் ஒன்றுதான், மருத்துவர்கள் ஆண்களுக்கு ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் ஒன்று.
மருத்துவர் ஒருவர் புகைப்படத்துடன், பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என் இச்செய்தியைப் பகிர்ந்துருப்பதாக அந்த செய்திப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
மருத்துவர்கள், ஆண்களுக்கு அவர்களது ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை பரிந்துரை செய்ததாகப் பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய முதலில் குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் தேடிப் பார்த்தோம். ஆனால், அதில் எவ்வித முடிவுகளும் நமக்குக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, சி.என்.என் செய்தித்தளத்தில் தேடியபோது அதுபோன்ற எவ்வித செய்தியையும் அவர்கள் வெளியிட்டதாக நமக்குத் தெரியவில்லை.
தொடர்ந்து, செய்தியில் உள்ள அந்த மருத்துவரின் புகைப்படத்தை மட்டும் கிராப் செய்து ரிவர்ஸ் சர்ச் முறையில் தேடிப் பார்த்தோம்.

அந்த தேடலின் முடிவில், பயோமெடிக்கல்.காம் என்னும் இணையதளத்தை நாம் சென்றடைந்தோம். குறிப்பிட்ட அந்த மருத்துவரின் பெயர் டாக்டர் மோகித்குமார் அர்தேஷ்னா என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது.

மேலும், இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நாங்கள் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம்.
Conclusion:
மருத்துவர்கள் ஆண்களுக்கு, ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியைப் பரிந்துரைத்ததாகப் பரவும் எவ்வித செய்தியையும் சி.என்.என் செய்தித்தளம் வெளியிடவில்லை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Result: False
Our Sources:
BioTe Medical: https://www.biotemedical.com/bioidentical-hormone-replacement-therapy-provider/claremont-medical-center-claremont-ca-91711/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)