Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கள் பாஜக தான்
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். அதில் இருப்பவர் திமுக கன்னியாகுமரி மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் சிபி.
இளம்பெண் ஒருவர் பாஜக கொடியைத் தாங்கியிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கள் பாஜக தான்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இளம்பெண் ஒருவர் பாஜக கொடியைத் தாங்கியிருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படத்தில் இருப்பவர் குமரி மாவட்ட திமுக மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் சிபி என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நாஞ்சில் சிபி, ஏப்ரல் 14, 2024 அன்று திமுக கொடி மற்றும் துண்டுடன் புகைப்படம் ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை எடுத்தே பாஜகவினர், தமிழகத்தில் வளரும் பாஜக என்பதாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.
Also Read: அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?
இளம்பெண் ஒருவர் பாஜக கொடியைத் தாங்கியிருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post from, @cebi_sweety, Dated April 14, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 14, 2025
Ramkumar Kaliamurthy
April 12, 2025