திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?

அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலையை கெடா மாடு என்றார் வானதி சீனிவாசன்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

“”ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க திமுகவினருக்கு அறிவு” திமுகவினர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என கிண்டல் செய்வதற்கு வானதி சீனிவாசன் பதிலடி” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

X Link | Archive Link

அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Facebook Link

அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள்’ என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

 Also Read: அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Puthiya Thalaimurai, Dated April 03, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular