Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ்
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
ராகுல் காந்தி தனது கைகளில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“எல்லா பொருத்தமும் பிரமாதம். அடேய்களா, உங்களுக்கு வேற நெம்பரே கிடைக்கலையாடா..” என்பதாக பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் உள்ளிட்ட பலரும் இதனைப் பரப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
ராகுல் காந்தி தனது கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில், ராகுல் காந்தி கைகளில் கட்டப்பட்டிருக்கும் பேட்ஜில் 756 என்கிற எண்ணே இடம்பெற்றுள்ளது என்பதை அறிய முடிந்தது.
மேலும், இதுதொடர்பாக ஆந்திர இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் கைகளில் உள்ள பேட்ஜ் எண் தெளிவாகத் தெரியும்படி புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில், அவருடைய பேட்ஜ் எண் 756தான் என்பதை நம்மால் உறுதி செய்ய முடிந்தது.
எனவே, அவருக்கு 420 என்கிற பேட்ஜ் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
Also Read: கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!
Conclusion
ராகுல் காந்தி தனது கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X Post from Congress, Dated September 21, 2023
Facebook Post from Priyanka Gandhi, Dated September 21, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.