ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkகனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் போரட்டம் நடத்திய பாஜகவினர்

Fact: வைரலாகும் படம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் போராட்டம் நடத்திய சங்கிகள்” என்று குறிப்பிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archived Link

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

Fact Check/Verification

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இப்பதிவுகளில் கனரா வங்கியின் பெயர்ப்பலகையோடு ஒரு படமும், பெயர்ப்பலகை இல்லாமல் மற்றொரு படமுமாக இரண்டு விதமான புகைப்படங்கள் பகிரப்படுவதை நம்மால் காண முடிந்தது.

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல்

இதை காண்கையில் இத்தகவல் தவறானதாக இருக்குமோ என சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இதனை தெளிவுப்படுத்த வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம். அதில் இப்படம் ஊட்டியில் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

நம் தேடலில் “கொடிக்கம்பம் அகற்றம்: பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்  என்று தலைப்பிட்டு ஆகஸ்ட் 30, 2020 அன்று மாலை மலரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததையும், அச்செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல்
Screengrab from Maalai malar

ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாஜகவினர் அனுமதியில்லாமல் கொடிக்கம்பம் நட்டதை தொடர்ந்து, அக்கம்பம் போலீசாரால் அகற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவினர் அங்கே போராட்டம் நடத்தியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

Conclusion

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Maalai malar, Dated August 30, 2020
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular