Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கடையநல்லூர் ரயில்நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலப் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் படம்.
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் இந்தி பெயரே முழுவதும் அழிக்கப்பட்டது. ஆங்கில பெயரில் L மற்றும் U எழுத்துக்களுக்கிடையே கருப்பு மையில் ஒரு கோடு மட்டும் போடப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில்நிலையத்தின் பெயர் பலகையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலப் பெயரை திமுகவினர் முழுவதும் அழித்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கடையநல்லூர் ரயில்நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலப் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்!’ என்று குறிப்பிட்டு தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆங்கில எழுத்தை தவறுதலாக அழிப்பதையும், அவருடன் இருந்த தொண்டர்கள் அதை நினைவுறுத்தியவுடன் அவர் இந்தி வார்த்தையை அழிக்க தொடங்குவதையும் காண முடிந்தது.
இதனையடுத்து தேடியதில் நியூஸ் தமிழ் வெளியிட்டிருந்த வீடியோவில் இந்தி எழுத்துக்கள் முழுவதுமாக அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. ஆங்கில எழுத்துக்களில் L மற்றும் U எழுத்துக்களுக்கிடையே கருப்பு மையில் ஒரு கோடு மட்டும் போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் கடையநல்லூர் திமுக நிர்வாகி சையது மன்சூர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவிலும் இந்தி வார்த்தை முழுமையாக கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டிருப்பதையும், ஆங்கில வார்த்தையில் L மற்றும் U எழுத்துக்களுக்கிடையே கருப்பு மையில் ஒரு கோடு மட்டும் போடப்பட்டிப்பதையும் காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் கடையநல்லூர் ரயில்நிலைய பெயர் பலகையில் இந்தி வார்த்தையை விடுத்து, ஆங்கில வார்த்தை முழுவதுமாக அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது என அறிய முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்கையில் indiarailinfo.com எனும் இணையத்தளத்தில் அதே படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் எந்த வார்த்தையும் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டிருக்கவில்லை.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட தவறானப் படம் என உறுதியாகின்றது.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கடையநல்லூர் ரயில்நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலப் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட தவறானப் படமாகும்.
உண்மையில் இந்தி பெயரே முழுவதும் அழிக்கப்பட்டது. ஆங்கில பெயரில் L மற்றும் U எழுத்துக்களுக்கிடையே கருப்பு மையில் ஒரு கோடு மட்டும் போடப்பட்டிருந்தது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Thanthi TV, Dated February 25, 2025
YouTube Video by News Tamil 24X7, Dated February 24, 2025
Facebook Post By Syed Mansoor, DMK official, Dated February 25, 2025
Indiarailinfo.com
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025
Ramkumar Kaliamurthy
April 2, 2025