ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஎடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தாரா?

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தார்.

Fact: ஈபிஎஸ் மீது விழுந்தது செருப்பு அல்ல; செல்போனாகும். அந்த செல்போன் தவறுதலாக கைத்தவறி பறந்ததாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் ஒருவர் செருப்பால் அடித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தார்.

X Link | Archive Link

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தார்.

Archive Link

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தார்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்ததாக கூறி பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் தமிழின் வாட்டர் மார்க் இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் சற்றும் எதிர்பாராமல் EPS மீது பறந்து வந்து விழுந்த Cellphone – பதறிப்போன தொண்டர்கள்” என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து நியூஸ் தமிழ் அதன் யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்தார்.

தொடர்ந்து தேடுகையில் குமுதம் நியூஸ் யூடியூப் பக்கத்திலும் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்ததாக செய்தி வெளியிடபட்டிருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் எடப்பாடி பழனிசாமி மீது விழுந்தது செருப்பல்ல; செல்போன் என உறுதியாகின்றது.  

இதனையடுத்து தேடுகையில் அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பறந்து வந்த செல்போன் தவறுதலாக வந்தது என்று தெளிவுப்படுத்தி வீடியோவுடன் பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அவ்வீடியோவில் தொண்டர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, கோஷமிட கையை உயர்த்திய மற்ற ஒரு தொண்டரின் கைத்தட்டி செல்போன் பறப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் ஈபிஎஸ் மீது விழுந்த செல்போன் தவறுதலாக விழுந்ததேயொழிய, யாரும் வேண்டுமென்றே வீசியது அல்ல என அறிய முடிகின்றது.

Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

Conclusion

எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர் செருப்பால் அடித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் ஈபிஎஸ் மீது விழுந்தது செருப்பு அல்ல; செல்போனாகும். அந்த செல்போனும் தவறுதலாக கைத்தவறியே ஈபிஎஸ் மீது விழுந்துள்ளது. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
YouTube Video from News Tamil 24×7, Dated October 01, 2024
YouTube Video from Kumudam News, Dated October 01, 2024
X post from AIADMK IT WING, Dated October 01, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular