Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பாஜகவின் முடிவுகள் டெல்லியில்தான் எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஸ்பார்க் மீடியா எனும் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை அடிப்படையாக வைத்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலரும் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர்.



Also Read: சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஸ்பார்க் மீடியா வெளியிட்டிருந்த செய்திக்கும் வெளியிட்டிருந்த வீடியோவுக்கும் தொடர்பில்லாமல் இருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில்”பாஜக தலைவர்கள் ஏற்க மாட்டேங்குறாங்க; சின்ன தயக்கம் இருக்குற மாறி இருக்கு; எதையும் தெளிவுப்படுத்தாத மாதிரி இருக்கு” என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதிலாக“இது டெல்லி எடுக்கற முடிவுதான்; மத்திய உள்துறை அமைச்சர் கூறிய பிறகு மற்றவர் பேசுவது சரியல்ல” என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று ஈபிஎஸ் எவ்விடத்திலும் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து இதுக்குறித்து தெளிவாக அறிய அவ்வீடியோவில் இடம்பெற்றிருந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து தேடினோம். இத்தேடலில் சன் நியூஸ் யூடியூப் பக்கத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பின் முழுப்பகுதி நேற்றைய முன்தினம் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில் 4:18 நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகதான் அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பது இன்னும் தெளிவற்று குழப்பமாக இருக்கின்றதே என்று ஊடகவியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு, சென்னைக்கு அமித் ஷா வந்தபோது அனைத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது; அதிமுக இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கும்; அதிமுக ஆட்சி அமைக்கும்; முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஸ் என்று அமித் ஷா தெளிவாக தெரிவித்தார். அதையும் மீறி மீண்டும் மீண்டும் அதற்கு வேறு வடிவம் கொடுத்து செய்தி வெளியிடுவது சரியா என்று எடப்பாடி பழனிசாமி மறுகேள்வி கேட்டு பதிலளித்திருந்தார்.
இதை தொடர்ந்தே ”பாஜக தலைவர்கள் ஏற்க மாட்டேங்குறாங்க; சின்ன தயக்கம் இருக்குற மாறி இருக்கு; எதையும் தெளிவுப்படுத்தாத மாதிரி இருக்கு” என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலாகவே“இது டெல்லி எடுக்கற முடிவுதான்; மத்திய உள்துறை அமைச்சர் கூறிய பிறகு மற்றவர் பேசுவது சரியல்ல” என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் தந்தி டிவி, மின்னம்பலம் உள்ளிட்ட வேறு சில ஊடகங்களிலும் இந்த செய்தியாளர் சந்திப்பு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அவற்றிலும் மேற்கண்ட தகவலே இடம்பெற்றிருப்பதை காணமுடிந்தது.
இதன்படி பார்க்கையில் பாஜகவில் முடிவு எடுப்பது டெல்லிதான் என்று ஈபிஎஸ் கூறியதை திரித்து, அடுத்தடுத்த இரண்டு கேள்விகளில் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று ஈபிஸ் கூறியதாக தவறான தகவலை ஸ்பார்க் மீடியா வெளியிட்டுள்ளதை அறிய முடிகின்றது.
இதனையடுத்து அதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக்கொண்டு பேசுகையில், அவரும் “இத்தகவல் தவறானது, பாஜகவுக்கு கூறிய கருத்தை திரித்து பரப்புகின்றனர்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து தேடுகையில் அதிமுக வழக்குரைஞர் அணியின் செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான இன்பதுரை வைரலாகும் தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லிதான் முடிவு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். பாஜகவின் முடிவுகள் டெல்லியில்தான் எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from Sun News, Dated July 5, 2025
Phone Conversation with Kovai Sathyan, National Spokesperson, AIADMK
X post by Inbadurai, Secretary, Advocates Wing, AIADMK and Member of Parliament, Rajya Sabha (TN), Dated July 6, 2025
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 21, 2025