ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும்...

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: “சிங்கார” சென்னை ?! கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு… மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா”

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதாகும்.

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“சிங்கார” சென்னை ?! கார் ரேஸுக்கு ரோடு போட நிதி இருக்கு… மக்களுக்கு ரோடு போட நிதி இல்லையா” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

Screenshot from X @AIADMKITWINGOFL

X Link/Archived Link

Screenshot from X @prabukanjanur1

X Link/Archived Link

Screenshot from X @Sathish36062032

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!

Fact Check/Verification  

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் ”Rain Battered North Chennai roads now unmotorable” என்கிற தலைப்பில் கடந்த டிசம்பர் 11, 2020 அன்று Times Of Indiaவில் வெளியாகியுள்ள கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், இப்புகைப்படம் திருவெற்றியூரில் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில் அப்புகைப்படம் தற்போதைய ஒன்று என்பதாகப் பரவி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Also Read: சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Conclusion

கார் ரேஸூக்கு ரோடு போட்ட தமிழக அரசிடம் மக்களுக்கு ரோடு போட நிதியில்லை என்று பரவும் புகைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Times Of India, Dated December 11, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular