Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சபரீசன் கைகளில் சொம்பு வைத்திருக்கும் காட்சி
வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
சபரீசன் கைகளில் சொம்பு தூக்கிச் செல்வதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“எங்கோ ஒரு மூளையில் பகுத்தறிவு வகுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கோ எவனோ பார்ப்பணியத்திற்கு சொம்பு தூக்கிக்கொண்டு இருப்பான்…யாருங்க அது சொம்பு தூக்கறது? இவரை தெரியாதா? இவர் தான் தமிழ்நாட்டின் எலான் மாஸ்க் மாப்பிள்ளை சார்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரியாணிக்காக திமுகவினர் அடிதடி; வைரலாகும் வீடியோ திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டதா?
சபரீசன் கைகளில் சொம்பு தூக்கிச் செல்வதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 03, 2022 அன்று விகடனில் வெளியாகியிருந்த ”திருச்செந்தூர்: சிறப்பு யாகம்… பக்தர்களுக்கு மறுப்பு; சபரீசனுக்கு மட்டும் அனுமதியா?- பாஜக கேள்வி” என்ற செய்தி கட்டுரையில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவருடைய கைகளில் சொம்பு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

மேலும், “திருச்செந்தூர் ’சபரீசன்’ யாகம்: மகேஷை பொறுப்பில் இருந்து தூக்கிய பாஜக! முழுப் பின்னணி!” என்று zee News செய்தியில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதிலும், அவரது கைகளில் சொம்பு போன்ற எதுவும் இல்லை.

அவர் திருச்செந்தூரில் நடந்து செல்லும் அப்புகைப்படத்தின் முழுமையான வீடியோ காட்சி சமயம் ஊடகத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஆகஸ்டு 05, 2022 அன்று வெளியாகியுள்ள இச்செய்தியில் அவர் கைகளில் எதுவும் இல்லை என்பதைத் தெளிவாக காண முடியும். எனவே, வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
சபரீசன் கைகளில் சொம்பு தூக்கிச் செல்வதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News Report from, Vikatan, Dated August 03, 2022
News Report from, Zee News, Dated August 04, 2022
News Report from, Samayam Tamil, Dated August 05, 2022
Ramkumar Kaliamurthy
December 17, 2025
Ramkumar Kaliamurthy
December 16, 2025
Ramkumar Kaliamurthy
December 13, 2025