Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தவெக தலைவர் விஜய் தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இத்தகவல் தவறானதாகும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஸ்டாலின் கூறிய கருத்தை விஜய் குறித்து கூறியதாக பரப்பப்படுகின்றது.
மதுரையில் அண்மையில் நடந்த தவெக மாநாட்டில் திமுக குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். அதிலும் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல் விஜய் தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்து விமர்சித்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தவெக தலைவர் விஜய் தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் “2026 தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்தே தொடங்கும்! #DravidianModel ஆட்சியில் வளர்ச்சியின் அளவுகோலாகப் பெயர் பெற்றுள்ள தமிழ்நாடு, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் புதிய உச்சங்களை அடையும்!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று முதலமைச்சர் ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 11, 2025 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த வீடியோவில் முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல் தரம் தாழ்ந்து தன்னை ஒருமையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகின்றார் என்று முதலமைச்சர் பேசி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தி இந்து யூடியூப் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததாக கூறி 36 நிமிட வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவின் 30:17 நிமிடத்தில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குறித்து முதலமைச்சர் விமர்சித்து பேசி இருப்பதை காண முடிந்தது. அந்த விமர்சனத்தில் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து ஒருமையில் பேசி வருகின்றார் என்பதும் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் ஒன் இந்தியா தமிழ், தினமலர், ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடகங்களிலும் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று முதலமைச்சர் கூறியதாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் முதலமைச்சர் என்கிற பொறுப்புக்கு மரியாதை தராமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி வருகின்றார் என்று ஸ்டாலின் கூறியது விஜய் குறித்து அல்ல; எடப்பாடி பழனிசாமி குறித்து என்பது தெளிவாகின்றது.
Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தவெக தலைவர் விஜய் தரம் தாழ்ந்து பேசி வருகின்றார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ தவறானதாகும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஸ்டாலின் கூறிய கருத்தை விஜய் குறித்து கூறியதாக தவறாக பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by M.K.Stalin, Chief Minister of Tamil Nadu, dated August 11, 2025
YouTube Video by The Hindu, dated August 11, 2025
Report by Dinamalar, dated August 12, 2025
Report by ETV Bharat, dated August 12, 2025
Report by One India Tamil, dated August 11, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025