Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரொல் விலை குறைவு என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்ததைத் தொடர்ந்து தமிழக அரசும் அதே போன்று குறைக்கவேண்டும் என்று தமிழக பாஜக கட்சியினர் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில், அப்போராட்டத்தில் அண்ணாமலை, “சவுதியை விட குஜராத்தில் விலை குறைவு. சவுதி அரேபியாவை விட பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது. தமிழக அரசும் அந்தளவிற்கு விலையை குறைக்கவேண்டும்” என்று பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்டாரா பத்திரிக்கையாளர் செந்தில் வேல்?
சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் அண்ணாமலை அவ்வாறு பேசியுள்ளாரா என்பது குறித்து அறிய பாஜக தமிழ்நாடு சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, அதில் பதிவாயிருந்த முற்றுகை போராட்டம் நேரலையில் அவர் அவ்வாறு பேசியது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, தந்தி டிவி பெயரில் குறிப்பிட்ட கார்டு வைரலாவதால் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது, “கோட்டையை நோக்கி செல்ல பாஜக முயற்சி. சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல பாஜக முயற்சி. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை” என்கிற நியூஸ்கார்டு இடம்பெற்றிருந்தது.
அக்குறிப்பிட்ட கார்டினை எடிட் செய்தே வைரல் கார்டினை உருவாக்கியுள்ளனர். தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோக வர்ஷினி மற்றும் அண்ணாமலையின் முதன்மை செயலர் பிரபாகர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்பதை உறுதி செய்து கொண்டோம்.
சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
BJP Tamil Nadu
Thanthi Tv
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 30, 2025