வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckPoliticsFact Check: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் அன்மோல் சௌத்ரி எனப்படும் இராணுவ வீரராவார்.

சமீபத்தில் கோஷ்டி தகராறு காரணமாக கிருஷ்ணகிரியில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screengrab from Twitter@new_bharatham
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screengrab from Facebook/நாரதர்
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screengrab from Facebook/மின்னல் பிரசாத் குருநாதன்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!

Factcheck / Verification

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபரின் முகத்தோற்றம் பிரபுவின் முகத்தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதை காண முடிந்தது.

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் என்பது குறித்து தேடினோம்.  இத்தேடலில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்மவால் ஜனவரி 25, 2022 அன்று ‘ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டு இதே வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்ததை காண முடிந்ததது.

Instagram will load in the frontend.

வித்யுத் ஜம்மவாலின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் Video credit: @anmol.__.chaudhary  என்று பதிவிடப்பட்டிருந்தது. எனவே இதனைத் தொடர்ந்து அந்த இன்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில்  வைரலாகும் வீடியோவில் காணப்படும் ராணுவ வீரரின் பெயர் அன்மோல் சௌத்ரி என அறிய முடிந்தது.

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
Screengram from Instagram@anmol.__.chaudhary

@anmol.__.chaudhary  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்மோல் சௌத்ரியின் பல வீடியோக்கள் இடம்பெற்றிருந்தது. அவற்றில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சில சாகச வீடியோக்களும் அடங்கும்.

Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.

Also Read: Factcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?

Conclusion

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Vidyut Jammwal instagram post dated January 25, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular