ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckNewsFactcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?

Factcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

Fact: ஐக்கிய அமீரகத்திலிருக்கும் அல் அமீன் பரோடா வங்கி கிளை மூடப்பட்டதால், அந்த கிளையில் கணக்கு வைத்திருந்தவர்கள் அவர்கள் கணக்கை மூட வரிசையாக நின்றனர்.

அதானி நிறுவனம் பங்குச்சந்தையில் தொடர் சரிவை சந்தித்தும் வரும் நிலையில், அதானி நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று பரோடா வங்கியின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் தத்தா சமீபத்தில் கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து,“பேங்க் ஆப் பரோடா சி இ ஓ அதானிக்கு கடன் கொடுக்கப் போவதாக ஒரு புரளி கிளம்பியது.. உடனே ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த வங்கியின் கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க மக்கள் குவிந்து விட்டார்கள்..!” என்று குறிப்பிட்டு மக்கள் கூட்டம் வரிசையாக பரோடா வங்கி ஒன்றின் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@gunapersonnel
பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@SJB56856832

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact check: பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Factcheck / Verification

பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இதில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவல் தவறானது என்று பரோடா வங்கி விளக்கம் அளித்ததாக ANI செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

ANI இச்செய்தியில் குறிப்பிட்டிருந்த தகவல்களகளை அடிப்படையாக வைத்து தேடியதில், பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை, அவ்வங்கியின் அதிகாரப்பூரவ் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அந்த அறிக்கையில்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் அய்ன் கிளையை மூடுவதாக பரோடா வங்கி ஒரு வருடத்திற்கு முன்னதாக முடிவெடுத்து, அதற்கான அனுமதியையும் தலைமை வங்கியிடம் பெறப்பட்டுவிட்டது. இதன்படி 22.03.2023 அன்று அல் அய்ன் கிளை மூடப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு 20.01.2023 அன்று தெரிவிக்கப்பட்டது.
அல் அய்ன் கிளையில் கணக்கு வைத்திருந்தவர்களின் கணக்குகள் அபுதாபி கிளைக்கு மாற்றப்படும். கணக்கை மூட விரும்புவோர் 22.03.2023க்குள் எந்த வித கட்டணமும் இல்லாமல் மூடிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் அல் அய்ன் கிளைக்கு வந்தனர். அவர்களுக்கு தேவையான் உதவிகளை வங்கி தரப்பிலிருந்து தொடர்ந்து தந்து வருகின்றோம்.  
தயவு செய்து சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Conclusion

பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Report published by ANI on February 27, 2023
Statement by Bank Of Baroda posted on Twitter, on February 26, 2023

(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular