Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாகனத்தில் முதல்வர் பயணிப்பது ஏன்? – மைனர் வீரமணி கேள்வி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். மைனர் வீரமணி அதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றால் அந்நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஸ்டாலினுக்கு தொடர்பில்லையா? அப்படியென்றால் அந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது” என்று U2Brutus மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாக அப்புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
Fact Check/Verification
ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றால் அந்நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
மைனர் வீரமணி, ரெட் ஜெயன்ட் நிறுவனம் குறித்தோ, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் குறித்தோ பேசியிருக்கிறாரா என்று ஆராய்ந்து பார்த்தபோது அப்படி எதுவும் இடம்பெறவில்லை.
வைரலாகும் நியூஸ்கார்ட் U2Brutus பெயரில் வைரலாகிய நிலையில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆராய்ந்தோம். அதில், அவர், ”வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து நாம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, வைரல் கார்ட் போலியானது என்று உறுதி செய்தார்.
Also Read: Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?
Conclusion
ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் தொடர்பில்லை என்றால் அந்நிறுவன வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிப்பது ஏன் என்று மைனர் வீரமணி கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, U2Brutus, Dated May 20, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.