திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல. கம்யூனிஸ்டுகளை வேரறுத்த மம்தா பானர்ஜியோடு திமுக உறவு வைத்துக் கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. மம்தாவோடு திமுக மூன்றாவது அணிக்கு முயன்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக மீனவர்கள்தான் போதைப் பொருள் கடத்தல் செய்திருப்பார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check / Verification
திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே இந்த நியூஸ்கார்ட் வைரலாவதும் நம்முடைய தேடலில் தெரிய வந்தது. தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்டில் பல்வேறு எழுத்துப்பிழைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், தந்தி டிவியின் நியூஸ்கார்ட் வடிவமைப்புடன் வைரலாகும் நியூஸ்கார்ட் வேறுபட்டிருந்தது.


எனவே, தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு செய்தியாளர் வினோத்திடம் தொடர்பு கொண்டு இந்த நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அப்போது அவர், “அருணன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டினை தந்தி டிவி வெளியிடவில்லை. இது போலியாக பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.
Also Read: ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக பரவும் தவறான தகவல்!
Conclusion
திமுக மம்தாவோடு கூட்டணி பேசுவது நல்லதல்ல என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அருணன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
News Card Example From, Thanthi Tv
Phone Conversation With, Vinoth, Thanthi TV Digital
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.