Claim: பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கம்;வானதி புதிய தலைவராக நியமனம்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது.
பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் என்றும், அண்ணாமலையை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் பாஜக அறிவிப்பு என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.
”தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம். அண்ணாமலை மீது பல தரப்பில் இருந்து வந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய பாஜக தலைமை பலமுறை அறிவுறுத்திய பிறகும் உரிய விளக்கம் அளிக்காததால் அண்ணாமலை பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு அந்த பதவியை கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது மத்திய பாஜக – நட்டா அறிவிப்பு” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?
Fact Check/Verification
பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அப்படி நியூஸ்கார்ட் ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று ஆராய்ந்தோம். ஆனால், 23ஆம் தேதியன்று அப்படி எந்த நியூஸ்கார்டும் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியாகியிருக்கவில்லை.
எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்திடம் இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று அவர் உறுதி செய்தார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டத்தாகவும், வானதி சீனிவாசன் பாஜக தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வானதி சீனிவாசன் புதியதாகக் கூட தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை என்று குறிப்பிட்டே பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
எனவே, வானதி சீனிவாசனை இதுதொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் செய்தி போலியானது” என்று உறுதி செய்தார்.
Also Read: சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?
Conclusion
பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone conversation with Vinoth, Thanthi Tv, Dated September 25, 2023
Phone Conversation With, Vanathi Srinivasan, BJP MLA, Dated September 25, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)