ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkசாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி – நடிகர் சித்தார்த்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“3 ஆண்டு திமுக ஆட்சியால் சாராயத்தையே ஒழிக்க முடியவில்லை இதில் எங்கே சனாதனத்தை ஒழிப்பது..? – செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் சித்தார்த்” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

சாராயத்தை
Screenshot from X @Mini52614198

Archived Link

Screenshot from Facebook/Tamil Irfank

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் எழுத்து வடிவம் குறிப்பிட்ட நியூஸ்கார்டுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய இந்த நியூஸ்கார்ட் அவர்களுடைய எழுத்துருவில் இல்லை.

 எனவே, அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, கடந்த 10ஆம் தேதியன்று, “நாம் அனைவரும் இப்போது இந்தியாவில் இருக்கிறோம்; யார், எந்த பெயர் வைத்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி – செய்தியாளர் சந்திப்பில் கோபப்பட்ட நடிகர் சித்தார்த்” என்று நியூஸ்கார்ட் ஒன்று  வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

வைரல் நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் மனோஜை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Phone conversation with Manoj, Sun News Tamil, Dated September 22, 2023
Facebook Post From, Sun News Tamil, Dated September 10, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular