சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஇந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றார் கனிமொழி

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இருவேறு வீடியோக்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கையில், ‘I don’t even understand. நீங்க என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசற?’ என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வியெழுப்பியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றார்கள்.

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ

X Link | Archived Link

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ

Facebook Link

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?

Fact Check/Verification

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் இருவேறு தினங்களில் நடைப்பெற்ற இருவேறு சம்பவங்களின் வீடியோவை ஒன்றாக இணைத்து எடிட் செய்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

முன்னதாக கனிமொழி பேசிய வீடியோ குறித்து தேடியதில், சன்சத் டிவி யூடியூப் சேனலில் நேற்றைய முன்தினம் ( செப்டம்பர் 20) ‘Kanimozhi Karunanidhi’s Remarks | The Constitution (One Hundred and Twenty-Eighth Amendment) Bill’ என தலைப்பிட்டு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இவ்வீடியோவில் கனிமொழி உரையை தொடங்கும்போதே எதிர்க்கட்சியினர் கூச்சலிடுவதையும், அப்போது கனிமொழி. “What is this sir heckling, I haven’t even starting, I don’t even understand. நீங்க என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசற?” என்றுபேசுவதை காண முடிகின்றது. இந்த வீடியோவில் பிரதமர் மோடி எந்த இடத்திலும் இடம்பெற்றிருக்கவில்லை.  

இதனையடுத்து பிரதமர் இடம்பெற்றிருக்கும் வீடியோ குறித்து தேடினோம். அதில் Prime Minister Narendra Modi’s Reply | Motion of Thanks on President’s Address in Rajya Sabha என்று தலைப்பிட்டு சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் ஏழு மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 09 ஆம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 1:23:50 மணி நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

Also Read: எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
YouTube video from Sansad TV, Dated, September 20, 2023
YouTube video from Sansad TV, Dated, February 09, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular