ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் எம்பி கனிமொழி. ஆலையிடம் திமுக 100 கோடி கமிஷன் பெற்றுள்ளது.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். சன் நியூஸ் பெயரில் போலியாக பரவி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் தூத்துக்குடி எம்பி கனிமொழி; ஆலையிடம் திமுக 100 கோடி கமிஷன் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையை (குற்றவியல் நடவடிக்கை) செயல்படுத்தாமல் இருக்க ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் திமுக 100 கோடி பணம் வாங்கியதாக ஸ்டெர்லைட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை திருமதி கனிமொழி அவர்கள் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது” என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @drsenthil84
ஸ்டெர்லைட் ஆலையை
Screenshot From Facebook/nagarajan.nadar.549
Screenshot from Facebook/star.saravana.52

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் தூத்துக்குடி எம்பி கனிமொழி என்பதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.  

வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் பெயரில் பரவிய நிலையில், சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் கார்த்திக்கை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; சன் நியூஸ் வெளியிட்டது அல்ல” என்று விளக்கமளித்தார்.

கடந்த மே 22 அன்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ்கார்டினை உபயோகித்து குறிப்பிட்ட எடிட் கார்ட் வைரலாகிறது என்பது நமக்கு உறுதியானது.

Fake News Card
Original News Card

தொடர்ந்து, இதுகுறித்து திமுக எம்பி கனிமொழியைத் தொடர்பு கொண்டு வைரலாகும் செய்தி போலியானது என்று உறுதி செய்து கொண்டோம்.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கிய அரசியல் தலைவர்கள் என்று பரவிய போலிச்செய்தியை நாம் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் தூத்துக்குடி எம்பி கனிமொழி என்பதாகப் பரவும் நியூஸ்கார்ட்  போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Sun News Tamil, Dated May 22, 2023
Phone Conversation With, Manoj Karthick, Sun News Tamil, Dated May 25, 2023   
Phone Conversation With, K.Kanimozhi MP, May 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular