ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் – எடப்பாடி பழனிச்சாமி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

“அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாயை கை நீட்டி வாங்கமாட்டார்கள். அப்படி வாங்குபவர்கள் புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுகவுக்கு நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

மகளிர் உதவித்தொகையை
Screenshot from X @aruran_tiru

Archived Link

Screenshot from Facebook/new.chennai.79

Facebook Link

Screenshot from Facebook/vkchinnamma

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!

Fact Check/Verification

மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதிய தலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். குறிப்பிட்ட 14ஆம் தேதியன்று “டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை” என்கிற செய்தி மட்டுமே இடம்பெற்றிருந்தது.

மேலும், வைரல் நியூஸ்கார்ட் குறித்து புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அதை புதியதலைமுறை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களிலும் இவ்வாறு எந்தவித பதிவும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

மகளிர் உதவித்தொகையை வாங்கும் அதிமுகவினர் நன்றி விசுவாசமற்றவர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated September 18, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular