ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Check‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டினரா?

‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டினரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

காம படைத்தலைவர் ஹெச்.ராஜா என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம்

பாஜக மூத்தத்தலைவர் ஹெச்.ராஜா கடந்த புதனன்று காரணமில்லாமல் திண்டுக்கல் எஸ்பி தன்னை கைது செய்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Archive Link

இந்நிலையில், “காம படைத்தலைவர் ஹெச்.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் கண்ணடிக்கின்றோம்என்று சிவகங்கை பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காம படைத்தலைவர் ஹெச்.ராஜா என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

காம படைத்தலைவர் ஹெச்.ராஜா என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம் - 2

Facebook Link

காம படைத்தலைவர் ஹெச்.ராஜா என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read:
 ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் அப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை அறிய முடிந்தது.

சிவகங்கை பாஜகவினர் ஓட்டிய உண்மையான போஸ்டரை மின்னல் அலி என்பவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் காவிப்படைத்தலைவர் ஹெச்.ராஜா என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

Original Poster

Facebook Link

அதேபோல் ‘கண்டிக்கின்றோம்’ என்பதையையே ‘கண்ணடிக்கின்றோம்’ என்று மாற்றியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது. வாசகர்கள்களின் புரிதலுக்காக உண்மையான போஸ்டரையும், எடிட் செய்யப்பட்ட போஸ்டரையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொர்ந்து தேடுகையில் ஹெச்.ராஜா கைதை கண்டித்து சிவகங்கை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதாக தாமரை டிவி என்று யூடியூப் சேனலில்  செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read: முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் மோசமான நிலையில் உள்ளதாகப் பரவும் பழைய புகைப்படம்!

Conclusion

‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered/Manipulated Media

Source

Facebook post from the user, Minnal Ali, Posted on 19th May 2022
Youtube Vidoe from the Youtube Channel, Thamarai TV, Published on 19th May 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular