வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckFact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று...

Fact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
இடதுபுறத்தில் உள்ளவர், இப்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. ஏழைப் பெண், இப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. கீழே இடது படத்தில் உள்ள புனிதர் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யின் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.


Fact
பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்கால புகைப்படம் என்று பரவும் புகைப்படங்கள் போலியானவை. அதில் யோகி ஆதித்யநாத் புகைப்படம் மட்டுமே உண்மையானதாகும்.

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“இடதுபுறத்தில் உள்ளவர், இப்போது இந்தியாவின் பிரதமர் (நரேந்திர மோடி). ஏழைப் பெண், இப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் (திரௌபதி முர்மு). கீழே இடது படத்தில் உள்ள புனிதர் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யின் (யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிராவின் முதல்வர் (ஏக்நாத் ஷிண்டே)” என்பதாக புகைப்படச்செய்தி ஒன்று பரவி வருகிறது.

Screenshot from Twitter @Sivasuriyanadar
Screenshot from Facebook/Raja Gold Bjp
Screenshot from Facebook/sambasivam.srinivasan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: வந்தே பாரத் ரயிலை மத்தியபிரதேசத்தில் இருந்து இயக்கிய சுரேகா யாதவ் என்று தவறுதலாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ்!

Fact Check/Verification

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்காலம் என்று பரவும் புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவது புகைப்படம்:

வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள முதலாவது புகைப்படத்தில் பிரதமர் மோடி காக்கி உடையில் தரையில் துடைப்பத்துடன் அமர்ந்திருப்பதாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த புகைப்படம் பரவிய நிலையில், RTI ஒன்று பதிவு செய்யப்பட்டு இந்த புகைப்படம் மார்ஃப் செய்யப்பட்ட ஒன்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ABP News உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் இத்தகவல் தெளிவாக 2016ஆம் ஆண்டே வெளியாகி உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான Wire கட்டுரை ஒன்றில், “An Associated Press photograph from June 1946, released with the caption, “One of India’s ‘untouchables’ holds the broom he uses in sweeping out streets, yards and houses.” என்கிற தலைப்பில் மோடி முகம் மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தின் உண்மையான படம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது புகைப்படம்:

வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள இரண்டாவது புகைப்படம் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு என்று பரவும் நிலையில், அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறைக்கு உள்ளாக்கினோம்.

நம்முடைய தேடலில், கடந்த ஜூலை 23, 2022 அன்று நியூஸ் 18 வெளியிட்டிருந்த திரெளபதி முர்மு குறித்த கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள இப்புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர் சுகுமார் டுடு என்றும், அவர் ஜனாதிபதி முர்மு பிறந்த கிராமமான உபர்பேடாவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அல்ல என்பது உறுதியாகிறது.

மூன்றாவது புகைப்படம்:

மூன்றாவது புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள யோகி ஆதித்யநாத் இளைமைக்கால தோற்றம் என்பது மட்டுமே வைரல் பதிவில் உண்மையானது ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியான மும்பை மிரர் உள்ளிட்ட இணையதள ஊடகங்களில் யோகி ஆதித்யநாத்தின் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

நான்காவது புகைப்படம்:

வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள நான்காவது புகைப்படம் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்கால படம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன்முடிவில், சமூக வலைத்தளத்தில் “’Maharashtra Rickshaw Panchayat Pune” என்கிற பக்கத்தில் ”மகாராஷ்டிரா ரிக்‌ஷா பஞ்சாயத்து நிறுவனர் மற்றும் தலைவர் பாபா காம்ப்ளே 1997ல் ரிக்‌ஷா ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம். ஸ்ரவண மாதத்தில் இந்த ரிக்‌ஷா, பிம்ரியில் அமைந்துள்ள ரத்ராணி ரிக்‌ஷா நிறுத்துமிடத்தில் ஆராதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஜ்தக் கடந்த ஜூலை 29, 2022 அன்று பாபா காம்ப்ளேவின் நேர்முக வீடியோவை வெளியிட்டுள்ளது.

எனவே, வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள யோகி ஆதித்யநாத் புகைப்படம் தவிர மற்ற புகைப்படங்கள் எதுவுமே உண்மையானவை அல்ல என்பது தெளிவாகிறது.

Also Read: Fact Check: லாலு பிரசாத் யாதவின் உறவினர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இவை?

Conclusion

பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளைமைக்கால புகைப்படம் என்று பரவும் புகைப்படங்கள் போலியானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
News Report From, The Wire, Dated November 14, 2018
Twitter Post From, ABP News, Dated January 21, 2016
News Report From, India Times Mumbai Mirror, Dated March 19, 2017
YouTube Video From, Aaj Tak, Dated July 29, 2022
News Report From, News 18, Dated July 23, 2022
Facebook Post From, Maharashtra Rickshaw Panchayat Pune (महाराष्ट्र रिक्षा पंचायत पुणे)



உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular